tamilnadu

நூறு நாள் திட்ட அட்டை உள்ள அனைவருக்கும் வேலை வழங்குக! விவசாயத் தொழிலாளர் போராட்டம் அறிவிப்பு

தஞ்சாவூர், ஜூலை 18- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சை ஒன்றியப் பயிற்சி வகுப்பு தஞ்சாவூரில் நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு, விதொச ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். சங்க மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை, “வாய்ப்புகளை பயன்படுத்துவோம். அமைப்பை பலப்படுத்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.பக்கிரிசாமி, மாவட்ட நிர்வாகிகள் உமாபதி, பிரதீப், சிபிஎம் தஞ்சை ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நூறு நாள் வேலைத் திட் டத்தில், அடையாள அட்டை உள்ள அனை வருக்கும் வேலை வழங்க வேண்டும். 200 நாள் வேலையும், 600 ரூபாய் கூலி யும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் முழு வதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஜூலை 28-ஆம் தேதி ஆர்ப்பாட் டம் நடத்துவது, ஆகஸ்ட் 9ஆம் தேதி சிஐ டியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடை பெறும் போராட்டத்தில் பெருந்திரளான மக்களைப் பங்கேற்கச் செய்வது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;