tamilnadu

img

திருக்குளம் மேலவீதியில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் உதயம்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் திருக்குளம் மேலவீதியில் சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைந்து சுபாஷ் சந்திர போஸ் நினைவு ஆட்டோ ஓட்டுநர் சங்க புதிய கிளை துவக்க விழா புதனன்று துவக்கப்பட்டது.  சங்க தலைவராக பழனிச்சாமி, செயலாளராக சீனிவாசன், பொருளாளராக வெங்கடேஷ், துணைத்தலைவராக கதிரவன், துணைச் செயலாளராக ராகவன் மற்றும் சங்க உறுப்பினர்களாக ஆனந்த பாபு, செந்தில், பாபு, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் கும்பகோணம் நகர ஆட்டோ ஓட்டுநர் சங்க கவுரவத் தலைவர் கே.செந்தில்குமார், பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், கார்த்திகேயன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் பி.எஸ் சீனிவாசன், கே.ஆர்.சந்திரன், ஆ.செல்வம் எஸ்.வி.மணி, டி.கே.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;