tamilnadu

img

மின்சார சட்டத்தை திருத்தும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 23- பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பது, மின்சார சட்டத்தை திருத்தும் நடவடிக்கை, எட்டு மணி நேர  வேலையை 12 மணி நேர மாக மாற்றுதல் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கை களை கண்டித்து, மின்வாரிய அனைத்து தொழிற்சங் கங்கள் சார்பாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மேற்பார்வை  பொறியாளர் அலுவல கத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் எஸ்.ராஜாராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோ விந்தராஜூ ஆகியோர் தலைமையிலும், கும்ப கோணம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமையிலும், பட்டுக் கோட்டை செயற்பொறியா ளர் அலுவலகத்தில், மாவட்ட பொருளாளர் எம். ஆரோக்கியசாமி தலைமை யிலும், தஞ்சாவூர் நகரிய செயற்பொறியாளர் அலு வலகத்தில், ஐக்கிய சங்க செயலாளர் ராகவன் தலை மையிலும், 230 கி.வோ துணை மின் நிலையத்தில் ஜெயச்சந்திரன் தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ், தலைவர்  அதிதூதமைக்கேல்ராஜ், நிர்வாகிகள் சங்கர், ரவி, ராதா உள்ளிட்ட அனைத்து சங்க மின் ஊழியர்கள் பங்கேற்றனர். 

சீர்காழி 
இதே போல் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் கிளை சார்பில் கிளை செயலாளர் அலெக்ஸ்சாண்டர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சேகர், தங்கமணி, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மணப்பாறை
சிஐடியு புறநகர் மாவட்டக்குழு சார்பில் சிஐடியு புறநகர் மாவட்ட துணை செயலாளர் ஷாஜ கான் தலைமையில் மணப் பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் நவமணி, அரசு போக்கு வரத்து சங்க புறநகர் மாவட்ட தலைவர் துரைராஜ், வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.

;