tamilnadu

img

தலைகவசம் அணியாத இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்ல தடை

சேலம், டிச.16- சேலத்தில் தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகனங் களை திருப்பி அனுப்பி காவல்துறையினரால் புதிய நடவடிக்கையை துவங்கியுள்ளனர். தமிழகத்தில் தலைகவசம் கட்டாய அறி விப்பை அமல்படுத்தும் வகையில் தலை கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டி களிடம் அபராதம் விதித்து வருகின்றனர்.  இந் நிலையில் சேலத்தில் அனைவரும் தலை கவசம்  அணிய வேண்டும் என்பதை கடை பிடிக்க வலியுறுத்தி தலைகவசம்  அணிந்து வாகனத்தை ஓட்டினால் தான் சாலையில் பய ணிக்க முடியும். இல்லை என்றால் திருப்பி அனுப்பப்படும் என்ற அறிவிப்பை வெளி யிட்டனர். இந்த அறிவிப்பை திங்கட்கிழமை முதல்  அமல்படுத்தி உள்ளனர். இதன்படி சேலம் மாநகரத்தின் முக்கிய சாலைகளை இணைக்கும் சுந்தர்ராஜ் சிக் னல் அருகில் மற்றும் தாதகாப்பட்டி சாலை இரண்டையும் போக்குவரத்து காவல் துறை யினர் கண்காணிப்பு வலையில் வைத்து யார் தலைகவசம் அணியாமல் சென்றா லும் அவர்களை அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். இது சம்பந்த மாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக் கையில், தலைகவசம்  கட்டாயம் அணிய வேண்டும் என்பதை உணர்த்தும் வகை யில் தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்தும் சில வாகன ஓட்டிகள் தலைகவசம் அணி யாமல் பயணித்து வருகின்றனர். எனவே, மாநகர காவல் ஆணையாளர் செந்தில்கு மார் உத்தரவின் அடிப்படையில் தலைகவ சம் அணிந்தால் மட்டுமே சாலையில் பயணிக்க முடியும் என்ற புதிய  முயற் சியை சேலம் மாநகர காவல்துறை செயல்ப டுத்தி உள்ளது என தெரிவித்தனர்.

;