tamilnadu

img

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி 

 சேலம், டிச. 1- உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சேலம் மற்றும் திருப்பூரில் கையெழுத்து மற்றும் விழிப்பு ணர்வு பேரணி ஞாயிறன்று நடைபெற்றது.  உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் தடுப்புப்பணி குறித்த உறுதிமொழி மற்றும்  விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.அ.ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்வாகனப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி, 5 ரோடு, 3 ரோடு, திருவாக் கவுண்டனூர் பை பாஸ், கொண்டலாம்பட்டி பை பாஸ் மற்றும் குகை வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறை வடைந்தது.  இதையடுத்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி யானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கூட்டரங்கில் நிறைவடைந்தது. இப்பேரணியில் அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியர் கல்லூரி, விநாயக மிஷன் ஹோமி யோதெரபி மருத்துவக்கல்லூரி மற்றும் அன்ன பூர்ணா செவிலியர் கல்லூரி உள்ளிட்ட 500க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர். இந்நிகழ்ச்சிகளில் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் (குடும்பநலம்) மரு.மு.வளர்மதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜா.நிர்மல்சன், துணை இயக்குநர் (காசநோய் பிரிவு) மரு.வி.கோகுல கண்ணன், அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மரு.எம்.கே.இராஜேந்திரன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.பி.வி.தனபால், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர் (பொ) மரு.லோ.அருணாசலம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு மேற்பார்வை யாளர் (பொ) ப.நல்லதம்பி உட்பட செவிலியர்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க சேலம் மாவட்ட அலுவலர்கள் மற்றும் பணியா ளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் 
இதேபோல் திருப்பூரில் லைப் என்னும் சமூக அமைப்பு சார்பில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் “எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும். எய்ட்ஸ் நோய் பரவாது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.