tamilnadu

img

இளம் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்கப்படுத்த நிதியுதவி

சென்னை,ஜன.9 இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக `ஆஸ்பைரிங் ஸ்டார்ஸ்' என்னும் திட்டத்தை காசாகிராண்ட் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இத் திட்டத்திற்காக நாடு முழுவது மிருந்து 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. நடுவர் குழு மூலம் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு  தடகள வீராங்கனை யான சென்னையைச் சேர்ந்த ருத்திகா, பெங்க ளூரைச் சேர்ந்த டென்னிஸ் சாம்பியன் சுகிதா மரூரி மற்றும் கோவையைச் சேர்ந்த ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை அபிநயா ரகுபதி ஆகிய 3 இளம் வீராங்கனை களை தேர்வு செய்தது. இந்த திட்டத்தில் சென்னை, கோவை மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 3 இளம் விளையாட்டு வீராங் கனைகளை ஊக்கப்படுத் தும் வகையில்  அவர்கள் தங்கள் விளையாட்டுகளில் மேலும் மேம்படுத்திக் கொள்ள தலா 2 லட்ச ரூபாய் நிதி உதவியையும் காசா கிராண்ட் அவர்களுக்கு வழங்கியது.இந்த நிதியை 3 இளம் வீரர்களுக்கும் அர்ஜூனா விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டா மற்றும் காசாகிராண்ட் சந்தையிடல் பிரிவு நிர்வாகி. ஈஸ்வர் ஆகி யோர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வழங்கினர். இந்த நிதி அவர்களின் பயிற்சி, விளை யாட்டு உபகரணங்கள், அவர் களுக்கான ஊட்டச்சத்து மற்றும் அவர்களின் தேவை களை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டது. 

;