tamilnadu

விழுப்புரம் மற்றும் தேனி முக்கிய செய்திகள்

ஏரி குடிமராமத்து பணி:  ஆட்சியர் சுப்பிரமணியன் ஆய்வு 

விழுப்புரம், ஜூலை 28- விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிதியில் 50க்கும் மேற்பட்ட ஏரிகளில் குடி மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்பிர மணியன் நேரில் சென்று பார்வையிட்டார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் கஸ்பாகாரணை ஏரியில் ரூ. 42 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியையும், ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக மதகு வழியாக தண்ணீர் செல்லும் பாதையை தூர்வாருவதையும் ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது அருகில் உள்ள வாய்க்கால்களை அகலப்படுத்தி, தூர்வாரி இருபுறமும் உள்ள கரையை பலப்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மயிலம் ஒன்றியம் கொல்லியங்குணம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் ரூ. 22 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வாய்க்கால் தூர்வாரும் பணியை யும் ஆட்சியர் ஆய்வு செய்தார். அதேபோல் வானூர் ஒன்றியம் கொஞ்சுமங்கலம் ஏரியில் ரூ.25 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளிநெலியனூர் ஊராட்சி ஏரியில் நடைபெறும் பணிகளையும் ஆட்சி யர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் பாசனதாரர்கள் அரசு அலுவலர்க ளுடன் இணைந்து இப்பணிகளில் முழுவதுமாக ஈடுபட்டு, இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது விழுப்பு ரம் பொதுப்பணித்துறை கீழ்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி உட்பட பலர் இருந்தனர்.

சேதமடைந்த நீர்த் தேக்கத் தொட்டி: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

விருதுநகர், ஜூலை 28- விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பாத்திமாநகரில் சேத மடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி யை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்டது பாத்திமாநகர். இங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது. இதில் ஏற்றப் படும் குடிநீர் காளியம்மன் கோவில் தெரு, 60 அடி சாலை, முதல் தெரு, மூஞ்சிமாதா கோவில் தெரு, கிருஷ்ண மாச்சாரி சாலை, நடுத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகிறது.  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஏற்கனவே பழுத டைந்திருந்தது. அதைச் சீரமைக்க வேண்டுமென மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து, கடந்த 2005-ஆம் ஆண்டு ரூ.2 லட்சம் மதிப்பில் பரா மரிப்பு செய்யப்பட்டது. தற்போது, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் தூண்களில் உள்ள சிமிண்ட் பூச்சுகள் உதிர்ந்து விட்டன. தூணின் உள்ளே இருக்கும் இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடையும் நிலையில் உள்ளது.  நகராட்சி ஆணையாளர், பொறியாளர் ஆகியோர் பாத்திமாநகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை உடனடியாக சீரமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு

தேனி, ஜூலை 28- போடியில் சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போடி நகராட்சி சார்பில் நடைபெற்றது.  போடி நகராட்சி பகுதியில் சாலைகளில் குப்பை கொட்டு வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குப்பைகளை வீடுகளுக்கே சென்று சேகரித்து வருகின்றனர். முக்கிய இடங்களில் குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனையும் மீறி சில இடங்களில் பொதுமக்கள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். இதனால் குப்பை மேடாக உருவாவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகை யில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. போடி நகராட்சி 20 ஆவது பகுதியில் சாலையோரங்க ளில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், பொது மக்கள் குப்பை கொட்டும் இடங்களை சுத்தப்படுத்தி அழகிய வண்ண கோலங்களை நகராட்சி ஊழியர்கள் போட்டு வரு கின்றனர். போடி தென்றல் நகர் சமுதாய கூடம் முன்பாக குப்பை கொட்டும் இடத்தில் கோலம் போட்டு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நகராட்சி சுகாதார ஆய்வா ளர் சுல்தான் சையது இப்ராஹிம் தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையா ளர் பொன்ராஜ், உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

சுடுகாட்டு பாதையை சீர் செய்திடுக

வேலூர், ஜூலை 28- சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். குடியாத்தம் அருகே தட்டப்பாறை பகுதியில் சுடுகாடு உள்ளது. இறந்த வர்களின் உடலை கொண்டு செல்ல ஏரி கால்வாய் வழியாகத்தான் செல்ல வேண்டும். சுடுகாட்டுக்குச் செல்லும் இந்த பாதை கடந்த 2 ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் தட்டப்பாறையை அடுத்த சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்த சின்னக்குழந்தை என்பவரின் மனைவி முனி யம்மாள் மரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சரியான பாதை வசதி இல்லாததால் பொது மக்கள் திடீரென சடலத்து டன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சாந்தி,  வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், வரு வாய் ஆய்வாளர் சத்திய நாராயணா, கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் இன்னும் சில நாட்களில் சாலை வசதி செய்து தர உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.