tamilnadu

6 டிகிரி வரை  வெப்பம் அதிகரிக்கும்

 சென்னை, ஜூன் 15- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுவையிலும் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட 2முதல் 4 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் அதிகமாக இருக்கும்.  சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை சார்ந்த பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.தென் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செ.மீட்டர் மழையும், தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 1 செ. மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.