tamilnadu

திருவண்ணாமலை மற்றும் கடலூர் முக்கிய செய்திகள்

தீபவிழா: புகார்களுக்கு கட்டுப்பாட்டு அறை

திருவண்ணாமலை, டிச. 6-  திருவண்ணாமலை தீபவிழா கடந்த 1 ஆம்  தேதி துவங்கப்பட்டது. முக்கிய நிகழ்வாக 10 ஆம் தேதி மலைமேல் தீபம் ஏற்றப்படும்.  தீபவிழாவிற்கு, திருவண்ணாமலை மாவட்  டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து  மாவட்டங்களிலிருந்தும், பல்வேறு மாநி லங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, கால்நடை சந்தை,  வாகன நிறுத்துமிடங்கள், தொடர் பேருந்து சேவைகள், சிறு கடைகள் மற்றும் பொருட்கள்  வைப்பதற்கான வைப்பறைகள் ஆகிய வற்றிற்கு எவ்வித கட்டணமும் இல்லை. மேற்  படி சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றினை உடனடியாக சரி  செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல்  11  புதன்கிழமை வரை 24 மணி நேரமும் செயல்  படும் வகையில், 7695 800 650 கைபேசி எண்  வாட்ஸ் ஆப்  வசதியுடன் கூடிய கட்டுப் பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  நிர்ணயம் செய்துள்ளதை விட அதிக ஆட்டோ கட்டணம், இலவசம் என அறிவிக்கப்  பட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலித்தல் போன்ற புகார்கள் மற்றும் வேறு ஏதெனும் குறைபாடுகள் இருந்தால் மேற்படி கைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.  மேலும், அதிக கட்டணம் வசூல் செய்யும்  ஆட்டோ எண் அல்லது ஒட்டுநர் புகைப்படம் மற்றும் இலவசம் என அறிவிக்கப்பட்ட சேவைக்கு கட்டணம் வசூலிப்பவர்கள் புகைப்படத்தினையும் மேற்படி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி வைத்தால் ஆட்டோ உரிமம் ரத்து செய்தல், கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  மாவட்ட ஆட்சித் தலைவர்  க. சு. கந்தசாமி  தெரிவித்துள்ளார்.

விருத்தாசலம் விற்பனைக் கூடத்திற்கு வரத்து அதிகரிப்பு

கடலூர், டிச. 6- விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு மழைக்குப் பின்னர் விளைபொருட்கள் விற்பனைக்காக அதிகளவில் வந்தன. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு சார்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்து விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை விலை நிர்ணயம் செய்து பெற்று வருகின்றனர். சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி மாவட்டங்களிலிருந்தும் இங்கு பொருட்களை கொண்டு வந்து  வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். நெல், உளுந்து, பருத்தி,  சிறுதானியங்கள் ஆகியவை அதிகளவில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். எனினும், கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விற்பனைக் கூடத்திற்கும் விளை பொருட்க ளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. உதாரணத்திற்கு நவ.29 ஆம் தேதி விற்பனைக் கூடத்திற்கு மணிலா 300 மூட்டை, நெல் 90 மூட்டை, உளுந்து, கம்பு தலா 20 மூட்டையும் எள், தேங்காய் பருப்பு, சோளம், திணை, தட்டைப்பயறு ஆகியவையும் குறிப்பிட்ட அளவிற்காக மொத்தம் 454 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. கனமழைக்குப் பின்னர் டிச.2 ஆம் தேதியன்று மொத்தம் 226 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன.அதில், நெல் மட்டும் 200 மூட்டையாகும். டிச.3 ஆம் தேதியன்று மொத்தம் 120 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தது. அதில், நெல் 100 மூட்டை, மணிலா 18 மூட்டை, எள்,உளுந்து தலா 1 மூட்டையாகும். மழையின் தாக்கம் முழுமையாக குறைந்து மிதமான வெயில் அடிக்கத் துவங்கியதும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்காக எடுத்து வருவதும் அதிகரித்தது. அதன்படி, புதன்கிழமையன்று நெல், உளுந்து, மணிலா, சிறுதானியங்கள் உள்பட அனைத்து வகையான  விளை பொருட்களும் 448 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமையும் அதிகரித்தது.  வெள்ளிக்கிழமையன்று நெல் 500 மூட்டை, கம்பு 85, மணிலா 38, எள், உளுந்து தலா 23, சோளம் 12,  மற்றும் தேங்காய் பருப்பு, சூரியகாந்தி, தட்டப்பயறு ஆகியவையும் மொத்தம் 687 மூட்டைகள் விலைக்கு வந்திருந்தன. மழைக்குப் பின்னர் வியாபாரிகள் வருகையும் அதிகமாக இருந்ததால் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்து வருவதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட வட்டாரங்கள் தெரிவித்தன.

;