tamilnadu

திருவள்ளூர் மற்றும் மதுரை முக்கிய செய்திகள்

சட்டவிரோத பணிநீக்கம்: மீண்டும் வேலை வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

திருவள்ளூர் ஜூன் 13-  போர்டே பர்னிச்சர் இந்தியா என்ற தனி யார் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்துள்ள தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று சிஐடியு  வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர், காக்களூர் தொழிற்பேட்டை யில் போர்டே பர்னிச்சர் இந்தியா என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு  98 பேர் நிரந்தர தொழிலாளர்கள், நூற்றுக்கும்  மேற்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலாளர்க ளாகவும், நூறு பேர் நிர்வாக ஊழியர்களாக வும் உள்ளனர். இந்த நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்து, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஊரடங்கு காரணமாக போர்டே பர்னிச்சர் நிறுவனமும் மூடப்பட்டு, அண்மையில் 30 சதவீத தொழிலாளர்களுடன் திறக்கப்பட்டது. இதனையடுத்து ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க, அங்குள்ள இந்தி யன் பர்னிச்சர் தொழிலாளர் சங்கம் கோரிக்கை  விடுத்தது. இதற்கு மாறாக  சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.சுரேஷ், துணைத் தலைவர் ஆர்.நாராயணன் உட்பட 14 பேரை  நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. ஊரடங்க காலத்தில் ஆட்குறைப்பு, சம்பள வெட்டு போன்றவை செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரசின் சட்ட, திட்டங்களையும் மீறி  நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்கி யுள்ளது. இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினர் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் தலை மையில் வெள்ளியன்று (ஜூன் 12)  மாவட்ட  ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், “பணிநீக்கம் செய்யப்பட்ட 14 பேருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்,  சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும்,  வேலைக்கு செல்ல வாகன ஏற்பாடு செய்ய  வேண்டும், பணியின் போது உணவு ஏற்பாடு  செய்ய வேண்டும், ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்க  மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு

மதுரை, ஜூன்  13- மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டி யைச் சேர்ந்த மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,”எனது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். எனது தாய் விவசாயக் கூலி வேலை பார்த்து வருகிறார். நான் கடந்த 2014 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். அப்பொழுது திருமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரி யாத ஒருவர் என் மீது ஆசிட் வீசி சென்று விட்டார். இதில் எனது உடல் முழுவதும் பாதிக்கப்பட்டது. வலது பக்க முகமும், வலது கண்ணம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் என் மீது ஆசிட் வீசியவர் மீது நடவ டிக்கை எடுக்கவும்,ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட எனது முகம் மற்றும் உடலுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அளிக்கவும், எனது மன உளைச்சல் போன்றவற்றிற்கா கவும்  நஷ்ட ஈடு வழங்க கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இது குறித்து உரிய சாட்சியங்கள்   அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, மேலும் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் , எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு  இன்னும் நஷ்ட ஈடு எதுவும் வழங்கப்பட வில்லை. எனவே அறுவை சிகிச்சை மற்றும் மன உளைச்சல் போன்றவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் வியாழனன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் ஆஜராகி, ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரிக்கை வைக்கப் பட்டது.  இதையடுத்து, ஆசிட் வீசியதில் பாதிக் கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு இழப்பீடாக வழங்கப் பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

கொள்ளையில் ஈடுபட்ட வாலிபருடன் சிறுவனும் கைது

காஞ்சிபுரம், ஜூன் 13-  திருபெரும்புதூர் அருகே தொடர் செல்போன் பறிப்பில் ஈடு பட்டு வந்த வாலிபருடன் சிறுவனும் கைது செய்யப்பட்டான். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமோ என்பவர் காஞ்சிபுரம்  மாவட்டம் காட்ராம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்  சாலையில் வேலை செய்து வருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலைக்கு அருகாமையில் நின்று கொண்டி ருந்த இவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்  15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்துக் கொண்டு சென்றனர்.  இதேபோன்று வடமாநிலத் தொழிலாளர்களிடம் கத்தி முனையில் விலை உயர்ந்த செல்போன்களை கொள்ளை யடித்து செல்வதாக  சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மேவளூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் சதீஷ் (19),  சிறுவன் கார்த்திக் (17 ) ஆகியோரை கைது செய்தனர்.

 

;