tamilnadu

img

பத்தாவது ஆண்டு விழா

சென்னை, நவ.26- சென்னையில் உள்ள ஜிடிஏ வித்யா மந்திர் பள்ளி யின் 10வது ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் சமீபத்தில்  நடைபெற்றது. பள்ளியின் சேர்ந்திசை க்குழுவின் பாடல்களுடன்  விழா தொடங்கியது. பள்ளியின் முதல்வர்  ரமா சுதே விழாவுக்கு தலைமை வகித்து ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவில் சிறுநீரக இயல்  அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவரா மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் அறங்காவலர்  ஏபிஜே எம்எல் ஷேக் தாவுத், ஜிடி குழுமங்களின் நிர்வாக அதிகாரி பிரவீன் ஜோஷி,  இயக்குநர் ஜிதேந்திர ஜோஷி, கல்விப்பிரிவு முதல்வர் டாக்டர் சியாமளா ஜி டி ஜி செயல்பாடுகள் பிரி வின் பொது மேலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோ ரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். கல்வி மற்றும் விளை யாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்வியில் சிறந்து விளங்கிய மாண வர்களுக்கு ஜிடி கல்வி அறக்கட்டளை உதவியுடன் வழங்கப்படும் காந்தி லால் ஜோஷி அறக்கட்டளை கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளிக்குழ ந்தைகளின் நடனம், நாடகம் மற்றும் இசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.