tamilnadu

இடமாற்றம்

சென்னை, மே 26-தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு இதர 15 நல வாரியங்களின் தலைமை அலுவலகம், சென்னை-102 அண்ணா நகர் கிழக்கு, ஜி-133 சந்தாமணி வளாகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் கட்டிடம் 2வது மற்றும் 3வது தளத்தில் இயங்கிவந்தது. இந்த தலைமையகம் தற்போது, ராயப்பேட்டை புதிய எண்: 69, பழைய எண்: 35, திரு.வி.க நெடுஞ்சாலை, சென்னை 14. இந்திய அலுவலர்கள் சங்க நூற்றாண்டு விழா கட்டிடம்(ஐஒஏ) 2வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய செயலாளர் சி. தங்கவேல் தெரிவித்திருக்கிறார்.