தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறக்கும் நேரத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அக்.22 (நாளை) முதல் இரவு 10 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.