tamilnadu

img

மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர் ’மெட்ராஸ்’ எஸ்.முத்தையா காலமானார்!!

தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளரும் மற்றும் வரலாற்று ஆசிரியருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவால் காரணமாக இன்று காலமானார்.


தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்லத்தூர் கிராமத்தில் கடந்த 1930ல் பிறந்தவர் எஸ்.முத்தையா. தனது பள்ளிப்படிப்பை ஆங்கில வழி கல்வியில் இலங்கை நாட்டில் முடித்தார். மேலும், தனது கல்லூரி படிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு திரும்பினார். பின்பு இவர் தனது வரலாற்று ஆய்வு அறிவின் மூலம் பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர். இவர் சென்னை நகரத்தின் வரலாறு குறித்து பல ஆய்வுகளையும், பத்திரிக்கை ஒன்றையும் நடத்தியவர். தமிழகத்தின் சென்னை மாநகரம் நிறுவப்பட்ட நாளை கொண்டாடும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஒருங்கிணைத்து வந்தவர்.


எஸ்.முத்தையா அவர்கள் Madras Book Club என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். சென்னை மாநகரத்தின் வரலாற்றை விவரிக்கும் Madras Musings என்ற 15 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும் பத்திரிக்கையையும் இவர் நடத்தி வந்தார்.


தற்போது சென்னையில் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


;