tamilnadu

புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, டிச. 20- மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும்  போராட்டம் நடந்து வருகிறது. அதேபோல் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து புதுவையில் வழக்கறிஞர்கள் சங்கம்  சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்  தலைவர் முத்துவேல் தலைமை தாங்கி னார். ஆர்ப்பாட்டத்தில்  சங்க பிரதிநிதிகள் பலர்  கலந்துகொண்டனர். மத்திய அரசின் சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். ஒரு மதத்தை சார்ந்து  சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் நாட்டின்  இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்கலைக்  கழக மாணவர்கள் கடுமையான போராட்  டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த  சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்  டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

குடியரசுத் தலைவர் புதுச்சேரி வருகை:  அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

புதுச்சேரி, டிச. 20- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப் பயணமாக புதுவை வருகிறார். அவர் வருகையை யொட்டி எடுக்கப்பட வேண்டிய நடவ டிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளு டன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப் பயணமாக வருகிற 23 ஆம் தேதி புதுவை வருகி றார். புதுவை வருகையை யொட்டி எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி (டிச.20)சட்டப்பேரவையிலுள்ள கமிட்டி அறையில் ஆலோசனைக் கூட்டம்  நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், ஆட்சியர் அருண், காவல்துறை  டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, அரசு  செயலர்கள் தேவேஸ் சிங், அபூர்வா கார்க், அன்பரசு, சுர்பீர்சிங், ஐ.ஜி.  சுரேந்தர் சிங் யாதவ், அகன்சிங்யாதவ் மற்றும் அரசின் அனைத்து துறை களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் வருகையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய பாது காப்பு ஏற்பாடுகள், வரவேற்பு, நிகழ்ச்சி  ஏற்பாடுகள் ஆகியவை குறித்து விரி வாக விவாதிக்கப்பட்டது. புதுவை பல்கலைக் கழகத்தில் 27-வது பட்ட மளிப்பு விழா வருகிற 23 ஆம் தேதி (திங்கட்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. ஐதராபாத்திலிருந்து தனி விமா னம் மூலம் புதுவைக்கு வரும் அவர் புதுவை லாஸ்பேட்டை விமான நிலை யத்துக்கு வருகிறார். அங்கு அவரை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வர வேற்கின்றனர். அங்கிருந்து கார் மூலம் காலாப்பட்  டில் உள்ள புதுவை மத்திய பல்கலைக்  கழகம் சென்று மதியம் 12.40 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புதுவை ஆளுநர் மாளிகைக்கு வருகி றார். சிறிது நேர ஓய்வுக்கு பிறகு அர விந்தர் ஆசிரமம் செல்கிறார். பின்னர்  அங்கிருந்து ஆரோவில் சென்று அங்கு மாணவர்களுடன் உரையாடுகிறார். தொடர்ந்து அவர் புதுவை ஆளுநர் மாளிகைக்கு கார் மூலம் திரும்புகிறார். அங்கு இரவு தங்குகிறார். மறுநாள் 24 ஆம் தேதி காலை கார்  மூலம் புதுவை விமான நிலையம் செல்கி றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம்  காரைக்கால் மாவட்டத்துக்கு செல்கி றார். அங்கு ஹெலிகாப்டர் இறங்க வசதி யாக புதிதாக ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டுள் ளது. அங்கிருந்து கார் மூலம் திருநள்ளாறு செல்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் தில்லி சென்றடைவார். குடியரசுத் தலைவர் வருகையை யொட்டி புதுவையில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர் கார் மூலம் செல்லும் வழிநெடுகி லும் பாதுகாப்பு கருதி தடுப்பு கட்டை கள் அமைக்கப்பட்டு வருகிறது.

கார் மரத்தில் மோதி விபத்தில் 2 பேர் பலி  

திருவண்ணாமலை, டிச. 20-  திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்( 45). தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். அதேபகுதியைச் சேர்ந்த கேசவன்(60)என்பவரும் அதே நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சொந்த வேலையாக காரில் ஒண்ணுபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றனர். பின்னர்  இரவு வீடு திரும்பினர்.  வண்ணாங்குளம் அருகே, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில்  29 தலைவர் உட்பட 815 பேர் போட்டியின்றித் தேர்வு: களத்தில் 16,604 பேர்

கடலூர், டிச. 20- கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவது நிறைவடைந்த நிலையில் 29 ஊராட்சிமன்றத் தலைவர்கள் உள்பட 815 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமுள்ள 6,039 பதவியிடங்களுக்கானத் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இத் தேர்தலில் போட்டியிட டிச.9 முதல் 16 ஆம் தேதி வரைக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில், மொத்தம் 20,520 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது 152 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.   மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள 19 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கவுன்சிலருக்கு 82 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 672 பேரும், ஊராட்சிமன்றத் தலைவருக்கு 1,302 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 891 பேரும் மொத்தமாக 2,947 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். நல்லூர் ஊராட்சி ஒன்றியம் 19 ஆவது வார்டில் ஒருவர் மட்டுமே களத்தில் இருப்பதால் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார். 29 ஊராட்சி மன்றங்களில் தலைவர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். எனவே இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 785 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அதாவது மாவட்டத்தில் மொத்தமுள்ள 6,039 பதவியிடங்களில் 815 பதவியிடங்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,224 பதவியிடங்களுக்கு 16,604 பேர் களத்தில் உள்ளனர். அதில் 29 மாவட்ட கவுன்சிலருக்கு 155 பேரும், 286 ஒன்றிய கவுன்சிலருக்கு 1,431 பேரும், 654 ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு 2,541 பேரும் போட்டியிடுகின்றனர். 5,040 வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 785 இடங்கள் போட்டியின்றி தேர்வானதைத் தொடர்ந்து மீதமுள்ள 4,255 பதவிகளுக்கு 16,604 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

;