tamilnadu

img

பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்: அரசு அறிவிப்பு

சென்னை:
பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதல் 5 பாடங்களாக குறைக் கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு:

மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், பதினோராம் வகுப்பில் புதிய பாடத் திட்ட முறையை 2020-21ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதாவது, பதினோராம் வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடங்களில் 3 பாடங்களை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம்.இதையடுத்து மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத்தொகுப்பைத் தேர்வு செய்ய பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும்.  மேலும், தனியார் பள்ளிகள் புதிய பாடத்தொகுப் புக்கு உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். சில தனியார் பள்ளிகள் விதிகளை மீறி சேர்க்கை முடித்துவிட்டு புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி கோருவது போன்ற நிகழ்வுகள் கடந்த கல்வியாண்டில் நடைபெற்றன.  எனவே, புதிய பாடத் தொகுப்புக்கு அனுமதி பெறாமல் எந்தப் பள்ளியும் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது.மேலும், தொடர் அங்கீகாரம் காலாவதியான பள்ளிகளுக்கும் புதிய பாடத்தொகுப்புக்கான அனுமதி தர இயலாது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;