ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்
வேலூர், அக். 25 - தலைமுறை பேரவை மற்றும் நாராயணி மருத்து வமனை இணைந்து விஐடி துணைத்தலைவர் கோ.வி.செல்வம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்க ளுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் காவலர் மண்டபத்தில் நடைபெற்றது. வேலூர் சரக போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஜி.தர்மராஜன் தலைமை வகித்தார். நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குநர் என்.பாலாஜி முன்னிலை வகித்தார். அரசு சித்த மருத்துவர் தில்லைவாணன் உணவு முறை குறித்து விளக்கி னார். சிறப்பு விருந்தினராக விஐடி துணைத்தலைவர் கோ.வி.செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஊர்காவல் படை உதவி கமாண்டன்ட் ஜெனரல் சுரேஷ், ஏரியா கமாண்டர் குமரன், துணை ஏரியா கமாண்டர் அர்ச்சனா சித்தார்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை தலை முறை பேரவை நிர்வாகி கள் எம்.சீனிவாசன், பா.பூமி நாதன், வழக்கறிஞர் பி.டி.கே.மாறன் ஆகியோர் செய்திருந்தனர்.
