tamilnadu

சென்னை மற்றும் வண்டலூர் முக்கிய செய்திகள்

சென்னையில் ரூ.1.70 கோடி  தங்கக் கட்டிகள் கொள்ளை

சென்னை, ஜன. 11- யானை கவுனியில் போலீஸ் போல் நடித்து  ரூ.1.70 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் நகைக் கடை  வைத்திருப்பவர் கமலேஷ். இவரிடம் வேலை பார்ப்பவர் தினேஷ்குமார். சென்னை யில் தங்கக் கட்டிகளை வாங்கிச் சென்று ஆந்திராவில் அதை நகைகளாகச் செய்து விற்பார்கள். இதற்கு தங்கக் கட்டி வாங்கு வதற்காக ஒரு காரில் வெள்ளியன்று (ஜன.10)  1 கோடியே 70 லட்சம் ரூபாயுடன் தினேஷ் குமார் சென்னை வந்தார். பாரிமுனை என்.எச். போஸ் சாலையில் உள்ள ஒரு வளாகத்தில் வழக்கமாகத் தங்கம்  வாங்கும் வினய் என்பரிடம் பணத்தைக் கொடுத்தார். அவரிடம் 4.3 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகளை வாங்கினார். தங்க கட்டி இருந்த பையை எடுத்துக் கொண்டு, தினேஷ் காரில் ஏறுவதற்காக வெள்ளியன்று  மாலை 5.30 மணியளவில் யானை கவுனி வீரப்பன் தெரு வழியாக நடந்து  சென்றார். வால்டாக்ஸ் ரோடு அருகே அவர்  சென்றபோது ‘டிப்டாப்’ ஆக இருந்த 4 பேர்  அவரை வழிமறித்தனர்.நாங்கள் சி.பி.ஐ. போலீஸ். உங்களிடம் துப்பாக்கி இருப்ப தாக எங்களுக்கு தகவல் வந்தது. பையை சோதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.பையைத் திறந்து சோதித்து விட்டு தினேஷ்  குமாரிடம் கொடுத்தனர்.பையைத் திருப்பி வாங்கிய அவர், தங்கக் கட்டிகள் பத்திர மாக இருக்கின்றனவா? என்று பையைத் திறந்து பார்த்தார்.அப்போது பைக்குள் அவர்  வைத்திருந்த தங்கக் கட்டிகள் இல்லை. இத னால் தினேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். போலீஸ் என்று கூறியவர்கள் அந்த தங்கக்  கட்டிகளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.  இதுகுறித்து யானை கவுனி போலீசில் புகார்  செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா  பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்க ளைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். போலீஸ் என்று கூறி ஏமாற்றியது யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? நடந்த  சம்பவம் என்ன? என்பது குறித்து யானை கவுனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உலக வங்கியிடம் ரூ.53 ஆயிரம் கோடி கடன் கேட்கும் சென்னை மாநகராட்சி

சென்னை, ஜன. 11- புதிய திட்டங்களை செயல்படுத்த உலக  வங்கியிடம் ரூ.53 ஆயிரம் கோடி கடன் கேட்டு திட்ட அறிக்கையை சென்னை மாநக ராட்சி சமர்ப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பாண்டிபஜாரில் நவீன வசதி களுடன் கூடிய திறன்மிகு நடைபாதை வளா கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். இங்கு சாலையின் இருபுற மும் நடைபாதை வளாகத்தில் குழந்தை களின் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், 14 இடங்களில் வை-பை வசதி  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக வங்கி நிதி பெற்று சென்னை மாநகராட்சியின் பகுதிகளில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாண்டி பஜார் போல மேலும் 10 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகங்கள் அமைக்கவும், மெகா சாலைகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக சோளிங்க நல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர், மயிலாப்பூர், அண்ணாநகர், திருவொற்றியூர், புரசைவாக்கம் உள் ளிட்ட இடங்களில் 100 சதுர கிலோ மீட்டர்  தூரத்துக்கு ‘மெகா சாலைகள்’ அமைக்கப் பட உள்ளது. இதேபோல் மாநகரின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி கிடைக்கச் செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதற்காக ரூ.10  ஆயிரம் கோடி திட்டமதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. மேலும் 17 இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் 7 இடங்களில் பாலங்கள் கட்டவும் ரூ.3,725 கோடியில் திட்டமதிப்பீடு தயா ரிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் இணைப்பு சாலைகள் திட்டத்துக்காக ரூ.250 கோடியில் புதிய திட்டம், ‘மல்டி லெவல்’ கார் பார்க்கிங் திட்டத்துக்காக ரூ.2,500 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை சேகரிப்பு மையங்களில் ‘பயோ  மைனிங்’ முறையில் மேம்பாடு செய்ய ரூ.1,338 கோடியில் புதிய திட்டம் உள்ளது. இதுபோன்ற மேலும் பல புதிய திட்டங் களை செயல்படுத்த உலக வங்கியிடம் ரூ.53  ஆயிரம் கோடி நிதி கேட்டு திட்ட அறிக்கையை  சமர்ப்பித்துள்ளனர். இது தொடர்பாக மாநக ராட்சி ஆணையர் பிரகாஷ் அதிகாரிகளுடன் பல்வேறு கூட்டங்களை நடத்தியுள்ளார்.

இலவச வேட்டி, சேலை கிடைக்காமல் வண்டலூரில் பொதுமக்கள் ஏமாற்றம்

வண்டலூர், ஜன. 11- செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் இலவச  வேட்டி, சேலை விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு தமிழக அரசு சார்பில்  இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் செங்கை மாவட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வேட்டி,  சேலைகள் ஏற்கனவே வந்து விட்டன. வட்டாட்சியர் அலுவல கங்களில் இறக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள்  அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அனுப்பப் பட்டன. மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலக மையங்க ளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட வண்டலூர் வட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சில நியாய விலைக் கடைகளில் காலை முதல் வேட்டி, சேலைகள் இருப்பு இல்லாமல் பொங்கல் பொருட்கள் மட்டும் வழங்கி, பொது மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் வேட்டி, சேலை  வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற னர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள  நிலையில் அதற்கு முன்னதாக வேட்டி சேலைகள் வழங்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்டத்தில் பல இடங்க ளிலும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வா கம் தட்டுப்பாடின்றி வேட்டி  சேலைகள் வழங்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. இதுகுறித்து வண்டலூர் வட்டாட்சியர் செந்தில் கூறிய தாவது: வண்டலூர் வட்டத்தில் மாம்பாக்கம், கூடுவாஞ்சேரி போன்ற குறுவட்டத்தில் வேட்டி சேலைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வண்டலூர் குறுவட்டத்தில் மட்டும்  விநியோகம் செய்யப்படவில்லை. வண்டலூர் குறுவட்டத் திற்கு 22 ஆயிரம் வேட்டி சேலைகள் தேவை. தற்போது 4ஆயி ரம் மட்டுமே உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் வந்து விடும். பொங்கல் பண்டிக்கைக்கு முன்பு அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரி வித்தார்.

குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

தூத்துக்குடி, ஜன.11-   தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் பரம சிவம் (40). கூலி வேலை செய்து வந்தார். அதே கிராமத்தில்  வசிக்கும் இவரது உறவினர் ஒருவர் இறந்ததால் அவரது  இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அங்குள்ள  ஒரு குளத்தில் குளிக்க சென்றாராம். குளத்தில் ஆழமான  பகுதிக்கு சென்ற இவர்  நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுப்புலட்சுமி அளித்த  புகாரின்பேரில் தட்டப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுகுறுநடுத்தர தொழில் முனைவோர் மேம்பாட்டு முகாம்: ஐஓபி நடத்தியது

சென்னை, ஜன. 11- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனை வோர் (எம்.எஸ்.எம். இ) துறைக்கு பெரிய  அளவில் நிதியுதவி வழங்கும் நோக்கத்துட னும், இந்தியாவின் தொழில்துறை மற்றும்  பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் கொள்கைக்கு இணங்கவும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதுச்சேரி மண்டலம்  சார்பாக ஓர் எம்.எஸ்.எம்.இ வாடிக்கையாளர்  மேம்பாட்டு முகாம் புதுச்சேரியில் நடத்தப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, 180 எம்.எஸ்.எம்.இ பயனாளிகளுக்கு ரூ. 8 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கினார். பய னாளிகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நன்றி யைத் தெரிவித்ததோடு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது, எம்.எஸ்.எம்.இ துறையை பெருமளவில் ஆதரிக்கும் விதத்தையும் நினைவு கூர்ந்தனர். பணமதிப்பிழப்புச் செயலாக்கத்தின் ஆரம்ப கட்டங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும், ஜி.எஸ்.டி. யினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையினாலும்,  சில சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்து, நஷ்டத்தை சந்தித்த எம்.எஸ்.எம்.இ துறைக்கு, இந்திய அரசு சில நிவாரணங்களை வழங்கியது.  வங்கி கடன் வாங்கிய பின், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்து, வணிகத்தைத் தொடர விரும்புவதோடு, வங்கிக்கடன் வாரா கடனாக மாறுவதை தடுக்கவும், இதுபோன்ற எம்.எஸ்.எம்.இ தொழில்களுக்க, தவணைகளை ஒத்திவைத்தல், ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற மறுசீரமைப்பு திட்டங்களுக்காக இந்த கடன் வழங்கப்பட்டது.

;