tamilnadu

சென்னை மற்றும் செங்கல்பட்டு முக்கிய செய்திகள்

 

சென்னையில் மேலும் 10 இடங்களில் நவீன நடைபாதை வளாகம்

சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை,நவ.30- சென்னை தி.நகரில் உள்ள பாண்டி பஜார் பகுதி யில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் உலக தரம் வாய்ந்த நடைபாதை கள், சாலைகள் அமைக்கப்ப ட்டுள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் பயன்படுத்துவ தற்காக ஸ்மார்ட் பைக், பேட்டரி கார்கள், நவீன இருக்கை வசதிகள், சிறு வர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. தி.நகரில் அமைக்க ப்பட்டுள்ள நவீன நடை பாதை வளாகத்துக்கு பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை யில் மேலும் 10 இடங்களில் புதிதாக நவீன நடை பாதை வளாகம் அமைக்க மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தலைமை பொறியாளர் (சிறப்பு திட்டம்) நந்தகுமார் கூறியதாவது:- தி.நகர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அமைக்க ப்பட்ட நவீன நடைபாதை வளாகத்துக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதைப்போல் சென்னை மாநகரம் முழுவதும் மேலும் 10 இடங்களில் புதிய நவீன நடைபாதை வளாகம் விரைவில் அமைக்கப்படும். தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் நெடு ஞ்சாலை, அண்ணாநகர் 2-வது மெயின்ரோடு, திருவான்மியூர், வேளச்சேரி பைபாஸ் ரோடு உள்பட 10 இடங்களில் இந்த நவீன நடைபாதை வளாகம் உருவாக்கப்படும். வேளச்சேரி, திரு வான்மியூர் பைபாஸ் சாலை யில் நடைபாதை வளாகம் அமைக்க நெடுஞ்சாலைத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. நவீன நடைபாதை வளாகம் அமைக்கப்படுவதன் மூலம் சென்னை மாநகரம் மேலும் அழகு பெரும். இவ்வாறு அவர் கூறினார்.
 

பட்டினப்பாக்கத்தில் கடல் அலையில் பொங்கி வந்த நுரை

சென்னை,நவ.30- சென்னை மெரினா கடற்கரையில், கடல்நீர் உள்வாங்குவது உள்ளிட்ட பல்வேறு அசாதாரணமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெரினா கடற்கரை இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஜொலித்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இதற்கு கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துகளை கூறினர்.  இந்தநிலையில் வெள்ளியன்று அதிகாலை சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடல் அலைகளில் திடீரென நுரை பொங்கி வரத்தொடங்கியது. இந்த நுரைகள் பட்டினப்பாக்கம் கடற்பகுதியில் பனிக்குவியல் போன்று காட்சி அளித்தது. கடற்கரையில் பனிபோல் நுரைகள் காணப்படுவதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அதைக்காண குவிந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் வித்தியாசமாக நுரைகளை கண்டதும், அங்கும் இங்கும் குதூகலமாக ஓடி விளையாடினர்.  இதைத்தொடர்ந்து பட்டினப்பாக்கம் கடற்கரையில் நுரை வருவது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடல்நீரின் மாதிரி கள் மற்றும் நுரைகளின் மாதிரிகளை சேகரித்த னர்.

செங்கல்பட்டு மாவட்ட முதல் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

செங்கல்பட்டு,நவ.30 செங்கல்பட்டு மாவட்டத்திற்கான முதல் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்களன்று (டிச.2) செங்கல்பட்டில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘செங்கல்பட்டு மாவட்டத்திற் குட்பட்ட பகுதிகளுக்கு, திங்கட்கிழமை முதல் வாராந்திர  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைவளாக கலையரங்க கட்டடத்தில் நடைபெறு கிறது. தாம்பரம்,  பல்லாவரம்,  செங்கல்பட்டு,  மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர் மற்றும் வண்டலூர் ஆகிய வட்டங்களில் வசித்து வரும் பொது மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இ.வி.எம் இயந்திரங்கள் வைக்க திருவள்ளூரில் புதிய கட்டம்

திருவள்ளூர், நவ.30-  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களை வைப்பதற்கு ரூ.5.50 கோடி மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டுவதற்கான பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தமிழகத்திலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு புதிய கட்டடம் கட்டும் பணிக்கான நிகழ்ச்சி நடை பெறும் முதல் மாவட்டமாக திருவள்ளுர் மாவட்டம் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு என தனியார்க ளிடம் வாடகைக்கு எடுப்பதும், அந்தந்தப்பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அறைகளை ஒதுக்குவதும், நடை முறையில் இருந்தது. இது போன்ற சிரமமான சூழல்களை கருத்தில் கொண்டு,  தமிழக அரசு, இயந்திரங்களை வைப்ப தற்கு புதிய கட்டடம் கட்டும் பணிக்கு என நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  வி.வி.பேட் மற்றும் இ.வி.எம். இயந்திரங்களை வைப்பதற்கு என அமையவிருக்கும் இப்புதிய கட்டட மானது 16,431 சதுர அடி பரப்பளவில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இக்கட்டடம், மின்தூக்கி வசதியுடன் கூடிய தரைதளம் மற்றும் முதல் தளங்களை கொண்டது. இங்கு கொண்டுவரப்படும் இயந்திரங்களை சோதனை யிட்டப்பின் உள்ளே எடுத்துச்செல்ல முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை கூடங்களும் அமைக்கப்பட வுள்ளது. இதனையடுத்து, அனைத்து இயந்திரங்களையும் வைப்பதற்கென பிரத்யேகமான அறைகள் ஒதுக்கப்பட்டு ள்ளன.மேலும், காவலர்கள் தங்கும் அறைகளும் அமையவுள்ளது. இயந்திரங்களை ஏற்றி, இறக்குவதற்கு ஏதுவான பாதைகளுடன் கூடிய கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.மேலும், இக்கட்டடமானது அனைத்துவகை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய வசதிகளும் செய்யப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .வெ.முத்துசாமி, திருவள்ளுர் வட்டாட்சியர் மா.பாண்டியராஜன், உதவி செயற்பொறியாளர் (கட்டடம், திருவள்ளுர் கோட்டம்) திரு.புண்ணியக்கோடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை,நவ.30-  வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளார்.  சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தற்போது 45.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் முதல் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் நீட்டிப்பான வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.1 கி.மீ தூரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடியில் நடைபெற்று வருகிறது. இவ்வழித்தடத்தில் மொத்தம் 9 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இதில், சர் தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை நிலையங்கள் மட்டும் சுரங்கப்பாதையில் அமைய உள்ளது. நீட்டிப்பு பணிகளை விரைவில் முடிக்கும் வகையில் அதிநவீன கட்டுமான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  இந்தநிலையில், இப்பணியை பிப்ரவரி மாததிற்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2020 பிப்ரவரி மாதம் பணிகளை முடித்து ஏப்ரல் மாதம் இவ்வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. பின்னர், ஜூன் மாதம் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையை  தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 

;