tamilnadu

img

மதுரை எய்ம்ஸ்; மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகுமென அரசு செயலாளர் தகவல் - சு. வெங்கடேசன் எம்.பி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் எதுவுமே நடைபெறாமல் உள்ளது. இதே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்ற இடங்களில் எல்லாம் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது.

இது தொடர்பாக இன்று இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் இ ஆ ப மற்றும் இணைச் செயலர் (எய்ம்ஸ்) திரு. நிலம்பூஜ் சரண் இ ஆ ப இருவரையும் சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகளை வைத்தேன்.

1. மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான செலவு 2,000 கோடியாக அதிகரித்துள்ளதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தரவுகளை வைத்து தெரியவந்துள்ளது, இதற்கென தேவைப்படும் "நிர்வாக அனுமதியை" (administrative sanction) உடனடியாக வழங்கவேண்டும்.

2. இதற்கென கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை விரைவாக கையெழுத்திட்டு செயல்படுத்தி வேலைகளை துரிதப்படுத்துவது.

3. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிர்வாக இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், துணை இயக்குனர் (நிர்வாகம்), மற்றும் நிர்வாக அலுவலர்களை உடனடியாக நியமித்து, இத்திட்டத்திற்கான நிர்வாக வேலைகளை விரைவுபடுத்த வேண்டும் .

ஆகிய மூன்று கோரிக்கைகளை வைத்தேன்.

1200 கோடியிலிருந்து 2000 கோடியாக உயர்வதற்கான காரணம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவமனை புதிதாக இணைப்பதால் திட்டமிடப்பட்ட செலவுத்தொகையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது” என்றனர். இதற்கான நிர்வாக அனுமதி மற்றும் அமைச்சரவை ஒப்புதல் பெறவேண்டிய நிலையுள்ளதால் விரைவாக அமைச்சரவை ஒப்புதல் பெற்று முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

அதே போல ஜப்பான் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதில் இன்னும் ஏன் காலம் தாழ்த்தப்படுகிறது ? அதற்கான தேதியை வரையறுங்கள் என்று கேட்டதற்கு மார்ச் இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளனர். இதன் தொடர்சியாக நிர்வாகத்துக்கு தேவையான அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளனர்.

#Madurai #AIIMS #MaduraiMPdemands

#aiimsatmadurai

 

;