tamilnadu

காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

மருத்துவ சிகிச்சையா? வியாபாரமா? 

என் நெருங்கிய உறவினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு  தனியார் மருத்துவமனையின் ஆலோசனை யின் பேரில்  மேம்பட்ட சிக்ச்சைக்காக சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 17 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவருடன் இருந்த நான் அவசர சிகிச்சைப்பிரிவிற்கு எதிரி லிருந்த காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தேன். அங்கு Insurance Help Desk என்ற பெயர்பலகையின் கீழ் அமர்ந்திருந்த இரு பெண்களும் அங்கு காத்திருந்தவர்களிடம் தனித்தனியாக அமைதியாகச் சென்று சிறிது நேரம் பேசி விட்டு அடுத்தவரிடம் பேசி  சிறிது நேரத்தில் என்னிடம் வந்தனர். வந்தவர்கள் தங்களை `Bajaj  Alliance employees`   என அறிமுகம் செய்து கொண்டு மெல்ல யாருக்காக நாம் காத்திருக்கிறோம். ஏன் வந்தோம் என கேட்டு உங்களிடம்  மருத்துவ செலவிற்கு பணம் இருக்கிறதா என கேட்க, எனக்கு அவர்களின் நோக்கம் புரிய ஆரம்பித்தது. “ உடனடியாக health insurance மூலம் உதவி செய்கிறீர்களா என்று கேட்டேன்.  “இல்லை சார் உங்கள் மருத்துவ செலவிற்கு நாங்கள் கடன் தருகிறோம்” என்றார்கள்.  “இவர்கள் கேட்கும் பணத்திற்கு வைத்தியம் பார்க்க முடியாது.  நாங்கள் அரசு மருத்துவ மனைக்குச் சென்று வைத்தியம் பார்க்கலாம் என்று உள்ளோம்” எனக்கூறினேன். “நீங்கள் அப்படி போக வேண்டாம் சார். இங்க  அரசு மருத்துவ மனையை விட நல்லா கவனிப்பாங்க. உங்களுக்கு வேண்டிய கடனை நாங்கள் தருகிறோம். நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப மெதுவாக மாதா மாதம் சுலபத் தவணையில்  பணத்தை கட்டினால் போதும் . மேலும் இங்கு நிறைய பிரிவுகள்  உள்ளன. உங்களுக்கு கடன் தொகை குறைவாக போதும் என்றால் அதற்கேற்ப பொதுப் பிரிவில் தங்க வைத்து நல்ல வைத்தியம் பார்ப்பாங்க” என்றார்கள். “இவ்வளவு பேசுகிறீர்களே இதற்கு கடன் கொடுக்காமல்  உடனடியாக பணம் கிடைக்க மருத்துவ காப்பீட்டிற்கு ( health Insurance ) வழி இருக்கிறதா” என்றுகேட்டேன். “அப்படி செய்ய முடியாது சார். அதற்கு வழி இல்லை “ என்றவர்களிடம்  இப்படி செய்கிறீர்களே  இப்படி பேச  உங்களுக்கு உத்தரவிட்டது யார்? என்றேன். “மருத்துவமனை நிர்வாகம் தான் சார்.  ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவமனையும் பஜாஜ் அலையன்ஸ் ம் கூட்டாக இதனை செய்கிறார்கள் “ என்றனர். “எம்மா  நோய் என்று இங்கு வருகிறார்கள். எல்லோரிட மும் பணம் இருக்காது. இவர்கள் கேட்கும் தொகையை கட்ட முடியாதவர்கள் அரசு மருத்துவ மனைக்குச் சென்று வைத்தியம் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு ஆசை காட்டி கடனாளியா மாத்திட்டிங்கனா அவர்கள் உழைத்து கடனை கட்டு வார்களா அல்லது சாப்பிடுவார்களா? உங்களது இந்த முறை தவறிய வியாபார யுக்தி பலரை கடனாளியாக மாற்றும் சிலரை தற்கொலைக்குக் கூட தூண்டி விடும் “எனத் தெளிவாகச் சொன்னதும்,  தங்கள் வயிற்றுக்காக வேலை செய்யும் இரு பெண்களும் வாயடைத்து தங்கள் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்கள். உயிர் காக்க வேண்டிய மருத்துவ மனைகள், தங்கள் வியாபாரத்திற்காக செய்யும் இது போன்ற செயல்கள் இச் சமூகத்திற்கு அவர்கள் விதைக்கும் சமுதாய புற்று நோய்க்கான விதைகள் என்பதை மறந்துவிடக்கூடாது. கோவி. சேகர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு
காஞ்சிபுரம், அக்.29-  மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்  செவ்வாயன்று (அக்.29)இறந்த நிலையில் மீட்கப்பட்டான். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூட வேண்டும். இனிமேல் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டு வதற்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கிணறு தோண்ட வேண்டும். கிணறு தோண்டும்போது முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பணி நடக்கும் பகுதியை சுற்றி முள்வேலி கம்பி அல்லது தடுப்பு கட்டாயம் அமைக்க வேண்டும். அதில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளை கிணற்றை முறையாக மூட வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்த பிறகு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணி திங்கள் முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகள், வி.ஏ.ஓ. க்கள் மற்றும் நிலஅளவை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

;