சென்னை, ஏப். 30- தாம்பரம் அருகே பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம குழந்தை முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த தாம்பரம் அருகே வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவரை ஒட்டிய புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அப்பகுதியில் நின்று தொலைபேசியில் பேசிகொண்டிருந்த தம்பதியினர் முட்புதரில் சென்று பார்த்த போது துணியால் சுற்றிய நிலையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் உதவியுடன் குழந்தையை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்த பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஓட்டேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். படம் உண்டு