tamilnadu

img

ஜூன் மாதம் மட்டும் 84.33 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளதாக, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

2024 ஜன.1 முதல் 2024 ஜன. 31 வரை மொத்தம் 84,63,384 பயணிகளும், 2024 பிப்.1 முதல் 2024 பிப்.29 வரை மொத்தம் 86,15,008 பயணிகளும், 2024 மார்ச் 1 முதல் 2024 மார்ச் 31 வரை மொத்தம் 86,82,457 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2024 ஏப்.1 முதல் 2024 ஏப். 30 வரை மொத்தம் 80,87,712 பயணிகளும், 2024 மே 1 முதல் மே 30 வரை மொத்தம் 84,21,072 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 2024 ஜூன் 21ஆம் தேதி அன்று 3,27,110 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, ஜூன் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,05,316 பயணிகளும், பயண அட்டைகளை பயன்படுத்தி 31,33,011 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 30,752 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 3,757 பயணிகளும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 15,61,001 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

;