தமிழகத்தில் உள்ள கடைகள் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் பெரும்பாலான கடைகள், நிறுவனங்கள் இரவு 11 மணிவரை இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கான மாதிரி சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தை 2018ல் மகாராஷ்டிரா மாநில அரசு முதல்முதலாக அமல்படுத்தியது. இந்நிலையில் தற்போது
தொழில் வளர்ச்சி. வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.