tamilnadu

img

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையை மேம்படுத்துக!

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் சுமார் 3,85,000த்திற்கும் மேற் பட்டோர் வசிக்கின்றனர். இதில்  கெலமங்கலம், தளி, ராயக் கோட்டை பேரூராட்சிகளில் துணை  சுகாதார நிலையம் மட்டுமே உள் ளது. பெரிய அரசு மருத்துவமனை என்பது தேன்கனிக்கோட்டையில் மட்டுமே உள்ளது. இங்கு 22 செவி லியர்கள் தேவை இருந்தும் 12  பேர்தான் உள்ளனர். 13 மருத்து வர்கள் இருந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக 5 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். 62 படுக்கை வசதிகள் இருந்தும் கூட, முழுமை யாக நோயாளிகள் அனுமதிக்கப்  படுவதில்லை. ரத்த வங்கி, மருத்துவ மனை, கட்டிட விரிவாக்கம், போதிய மருத்துவர்கள் செவி லியர்கள் கேட்டு கடந்த 5 ஆண்டு களாக வாலிபர் சங்கம், விவசாயி கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடிய தன் விளைவாக கட்டிடம் மற்றும்  ரத்த வங்கி விரிவாக்கம் செய்யப் பட்டது. ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டது. ஆனால் ரத்த வங்கி பயனற்று கிடக்கிறது. 12 சுகாதாரப் பணியாளர்கள் தேவை உள்ளது. ஆனால் 2 பேர் மட்டுமே உள்ளனர். பிணவறையில் குளி ரூட்டும் இயந்திரம் இல்லை. தொடர்  போராட்டங்ளால் மருத்துவ மனைக்கும், நோயாளிகளுக்கும் கிடைத்த வசதிகளை இங்குள்ள நிர்வாகமும், மருத்துவ அலுவலர்க ளும், மருத்துவர்களும், பயன்ப டுத்துகின்றனர். மருத்துவமனை சீர்கேடுகளை சீர்செய்து, போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு ஊழியர்களை நியமனம் செய்ய அரசும், மாவட்ட ஆட்சியரும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலித் மக்களுக்கு சுடுகாடு வேண்டும்

தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான தலித் பகுதி  மக்களுக்கு சுடுகாடு என்று எதுவும் இல்லை. ஏரிக்கரை, ஓடை, ஓரம்  புறம்போக்கில் சாலையோரம் என எதிர்ப்பில்லாத இடங்களில் சட லத்தை புதைத்து வருகின்றனர். ஜார்கலட்டி, உசனப்பள்ளி, மல்ல சந்திரம், தடிக்கல், எணிமுச்சந்திரம் உட்பட பல கிராமங்களுக்கு சுடு காடு இல்லாததால் தலித் மக்கள் சடலத்தை புதைக்க கடும் நெருக்கடி  ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் சுடுகாடு அமைக்க மாவட்ட ஆட்சி யர் இடம் ஒதுக்க வேண்டும். அன்னியாஸ்பத்தி தலித் மக்கள் சுடுகாடு தனியார்களால் ஆக்கிர மிக்கப்பட்டு வருகிறது. எனவே சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்றி வேலி  அமைத்து, பாதையும் அமைத்துத்தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;