விழுப்புரம், அக். 29- விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் கிரா மத்தில் முக்கிய தெருக்கள் அனைத்தும் குண்டும், குழியு மாக சகதியாக மாறியுள்ள அவலம் நிலவுகிறது. திருவெண்ணெய்நல்லூ ரில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் டி. புதுப்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. குறிப்பிடத் தக்க மக்கள் தொகையோடு பெரிய கிராமமாக இருக்கும் இங்கு அமைந்துள்ள பல் வேறு தெருக்களில் சாலை கள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. முக்கிய சாலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு உள்ளே அமைந்துள்ள இக் கிராமத்தில் இருசக்கர வாக னங்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அனை வரும் சாலைகளில் செல்லும் போது மிகுந்த அவதிய டைந்து வருகின்றனர். மனைவி, குழந்தைகளுடன் வருவோர் கீழே விழுந்து காய மடையும் அவல நிலையும் உள்ளது. தலித் மக்கள் வசிக்கக் கூடிய பகுதி இதைவிட கோர மான நிலையில் உள்ளது. ஆங்காங்கே மழை நீர் தேங்கிய நிலையில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலைகள் அனைத்தும் சேதமடைந்து நோய் பரவும் நிலை உள்ளது. மேலும் தலித் பகுதி மக்களுக்கான சுடுகாடு அமைந்துள்ள பகு திக்குச் செல்லும் சாலை மிகக் குறுகி இருபுறமும் முட்க ளால் சூழப்பட்டு ஆறு அடி கூட அகலம் இல்லாமல் சேறும்,சகதியுமாக அமைந் துள்ளது. இறந்தவர் உடலை வாகனத்தில் எடுத்துச் செல்லும்போதுகூட ஆங் காங்கே சேற்றில் சிக்கிக் கொள்ளும் நிலை நீடிக்கி றது. மாரியம்மன் கோயில் தெருவில் நடுவே உள்ள சந்தில் மின்கம்பம் மிக ஆபத்தான நிலையில் ஆடிக்கொண்டு உள்ளது. இதற்கு வரக்கூடிய மின்கம்பி கள் மிகத் தாழ்வான நிலை யில் உள்ளதால் எந்நேரத்தி லும் இதனருகில் வசிக்கக் கூடிய குடும்பத்தினர் ஆபத்தில் சிக்கும் நிலை தொடர்ந்து இருந்து வரு கிறது. சித்லிங்கமடத்தில் இருக் கும் மின்வாரிய அலுவல கத்திற்கு தெரிவித்தும் கம்பம் மாற்றப்படவில்லை. இப்பகுதியில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மைய கட்டிடம் முழு வதும் மழைக்கு ஒழுகும் நிலையில் உள்ளது. காலை யில் கதவைத்திறந்து தண் ணீரை வெளியேற்றி னால்தான் உள்ளே சென்று பணிகளை பார்க்க இயலும். மழைக்காலமாக இருப்ப தால் எந்நேரத்திலும் இடிந்து விழக் கூடிய சூழலும் நிலவு கிறது. திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட இக்கிராமத்திற்கு சட்டமன்ற உறுப்பினருக்கான நிதியில் சாலை அமைத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பல மாதங்களாக சாலை அமைக் கப்படவில்லை. எனவே உட னடியாக அனைத்து தெருக் களிலும் சாலைகளை மேம் படுத்துவதும், அங்கன்வாடி மையத்தை புதுப்பித்து தருவதும், பழைய காலனி சுடுகாட்டுப் பாதையை சிமெண்ட் சாலையாக அமைத்து விரிவுபடுத்தி தரு வதும், விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை அகற்று வதும் மிக, அவசர அவசிய மாக செய்ய வேண்டிய பணி கள் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராமர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் எஸ்.குமார், ஆர். வீரன் ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர்.