tamilnadu

img

வெறிச்சோடிய தொழிற்பேட்டைகள்....

சென்னை:
இரண்டு மாதங்களுக்குப் பின், கிண்டி, அம்பத்தூர் உட்பட தமிழகத்தின் 17 தொழிற்பேட்டைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு உட்படாத 17 தொழிற்பேட்டைகளும், அந்த பகுதிகளிலேயே உள்ள 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படலாம் என கூறப்பட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தினமும் இரு முறை தொழிற்சாலையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

அரசின் அனுமதியை தொடர்ந்து திங்களன்று (மே 25) சென்னை கிண்டி தொழிற் பேட்டையில் சில ஆலைகளை திறந்தும் போதிய ஊழியர்கள் வராததால் மூடப்பட்டன.இதற்கு காரணம் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததே என்று தொழிற்பேட்டை தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  சிறு குறு தொழில் முனைவோராக இருப்பதால் தொழிலாளர்களை அவர்களது இல்லத்திலிருந்து தனி வாகனம் மூலம் ஆலைகளுக்கு அழைத்து வர வசதி இல்லை என்றும் இதனால் ஊழியர்கள் பணிக்கு வருவது சிரமமாக இருப்பதாகவும் தொழில் முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொழில் நிறுவனங்களை திறப்பதற்கு தொழில் முனைவோர் முன்வந்தும் பணியாளர்கள் தொழிலாளர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து துவங்கப்பட்டது நிலைமை சீரடையும். உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணிக்கு வருவது என்பது முடியாத காரியம் ஆகும் எனவே தற்போதைய சூழ்நிலையில் உற்பத்தியை துவக்குவது சாத்தியமில்லை என்றும் தொழில்முனைவோர் வேதனையுடன் தெரிவித்தனர்.

1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டை ஆகும். 1,430 ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்துள்ள இந்த தொழிற்பேட்டையில் 1,800 நிறுவனங்கள் உள்ளன. மோட்டார் வாகன உதிரி பாக தொழிற்சாலைகள் அதிக அளவில் இருக்கின்றன. இது தவிர ஆடை தயாரிப்பு, என்ஜினீயரிங் நிறுவனங்களும் உள்ளன. ஆனாலும் அரசு கட்டுப்பாடுகள் காரணமாக தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை இந்த தொழிற்பேட்டையிலும் ஒருசில நிறுவனங்கள் மட்டுமே செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டது அதுவும் போதிய ஊழியர்கள் இல்லாததால் அந்த வேகத்திலேயே மூடும் நிலைமை ஏற்பட்டது.

;