கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் விலை ரூ.26 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், உள்நாட்டிலும் தங்கத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 25,704--க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 464 ரூபாய் உயர்ந்து ரூ.26,168 ஆக உள்ளது.
22 கேரட் தங்கத்தின் விலை!
இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,271 ஆகவும், சவரனுக்கு ரூ. 26,168-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை!
தூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 464 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,427 ஆகவும், சவரனுக்கு ரூ.27,416-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 41.50 காசுகளுக்கும் ஒரு கிலோ ரூ.41,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.