கடலூர், ஜூலை 7- கடலூர் வட்டம் பாதிரிக்குப்பம் ஊராட்சி நெடுஞ்சாலை புறம் போக்கில் அரை நூற்றாண்டு களாக வாழ்ந்து வந்த 70க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடிசை களை உயர் நீதிமன்ற உத்தர வைக் காட்டி நெடுஞ்சாலைத்துறையினர் வருவாய்த்துறை உதவியு டன் அகற்றினர். பல மைல் தூரத்திற்கு அப்பால் வாழ்வதற்கு தகுதி யற்ற இடத்தில் பற்றாக்குறை யாக 1.25 சென்ட் வீதம் வீட்டு மனைக்கு அனுமதிச் சீட்டு வழங்கி 8 மாதங்களா கியும் எந்த நடவடிக்கையும் வருவாய்த் துறை எடுக்க வில்லை. பாதிக்கப்பட்ட வர்கள் குடியிருக்க வீடு இன்றி சாலையோரத்தில் வாழும் நிலைமை ஏற்பட்டி ருக்கிறது. அரியாங்குப்பம் ஊராட்சியில் சர்வே எண் 54இல் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 75 ஏக்கருக்கு மேல் உள்ளது. அந்த இடத்தில் குடிசைகளை இழந்து தெருவில் நிற்கின்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு வருகின்ற 8ஆம் தேதி விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கடலூர் சார் ஆட்சியர் அலுவல கத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து சமா தானக் கூட்டம் வருவாய் வட்டாட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் எழுத்து மூலம் உறுதியளித்தார். பின்னர் போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், தலைவர் எஸ்.கே.ஏழுமலை, ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூரத்தி, நிர்வாகி கள் தமிழரசன், வைத்திய லிங்கம் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.