வேலூர், ஆக.23- வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் 40 க்கு மேற்பட்ட தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு என்று இருந்த சுடுகாடு, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு தடைப்பட்டது. சுடுகாட்டுக்கு செல்ல சாதி இந்துக்களுக்கு சொந்தமான விளை நிலத்தின் வழியாகத்தான் எடுத்துச்செல்ல வேண்டும், சாதி இந்துக்கள் வழி விட அனுமதிக்க வில்லை. எனவே தான் நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து கயிறு கட்டி ஆற்றில் இறக்கி, ஆற்றின் நடுவில் பிணத்தை எரியூட்டி வந்தனர். கூலி தொழில் செய்து வந்த குப்பன் (56) வழக்கம் போல் வேலைக்கு செல்லும் போது, அடையாளம் தெரி யாத வாகனம் மோதி பரிதாப மாக பலியானார். அவரு டைய இறுதி ஊர்வலம் வழக் கம் போல் மேம்பாலத்தி லிருந்து கயிறு கட்டி இறக்கி ஆற்றின் நடுவே இறுதி சடங்கு செய்யப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பொதுப் பணித்துறை அதி காரிகள், நாராயணபுரம் கிரா மத்திற்கு சென்று தலித் மக்கள் இடுகாட்டிற்காக 3.2 சென்ட் நிலத்தை ஒதுக்கினர். ஆனால் அந்த இடத்தை ஏற்கமாட்டோம், மீண்டும் சுடுகாட்டுக்கு பாதை விட மாட்டார்கள். எனவேதான் அரசு ஒதுக்கிய இடுகாட்டை ஏற்க முடியாது என்றனர்.
இந்நிலையில், அந்த கிரா மத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.சாமிநாதன், ஏகலைவன், வாணியம்பாடி தாலுகா செயலாளர் இந்து மதி, எம்.ஜி. ராமச்சந்திரன், அர்சுனண் உள்ளிட்டோர் தலித் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்த னர். மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை துணையாக இருக்கும் என உறுதியளித்தனர். பின்னர், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.சாமிநாதன் கூறுகையில், “நாராயணபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதி ஆந்திர எல்லையாகும். அரசு ஒதுக்கி கொடுத்துள்ள நிலம் சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதியை கடந்துதான் இடு காட்டுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் சாதி மோதல் ஏற்படும் அபா யம் உள்ளது” என்றனர்.
மார்க்ஸ்சிட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் எஸ்.தயாநிதி, “நாரா யணபுரத்தில் வசித்து வரும் தலித், அருந்ததி மக்களின் நீண்ட கால கோரிக்கை என்பது கிராமத்தின் மிக அருகிலேயே நிரந்தர சுடுகாடு வேண்டும் என்ப தாகும். எனவே, இப்பகுதி மக்களுக்கு ஏற்படும் சிர மங்களை அரசு, அதிகாரி களும் உணர்ந்து, அந்த மக்கள் வசிக்கும் கிராமத்தின் அருகே நிலம் ஒதுக்க வேண்டும்” என்றார். கிராமத்தில் பிரச்சனை ஏற்பட்டால் தகவல் கொடுங்கள் என வட்டாட்சி யர் கூறுவது சரியாக இருக்காது என்றும் தயாநிதி தெரிவித்தார்.