tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் தே.லட்சுமணன் நினைவு நாள்.....

தோழர் தே. இலட்சுமணன் கால்நடைத் துறையில் சேர்ந்து அரசுப் பணியாற்றினார். கால்நடைத்துறை ஊழியர்களை அணிதிரட்டி படிப்படியாக தோழர் எம்.ஆர். அப்பனுடன் இணைந்து அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கத்தை உருவாக்குவதில் மாநிலம் முழுவதும் சென்று இரவு - பகலாக உழைத்தார். இக்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு, அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டார்.

1981ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டக் குழுவின் முதல் அமைப்புச் செயலாளராக தோழர் தே.லட்சுமணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985ஆம் ஆண்டு மாநில செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.‘டி,எல்,’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் தே.இலட்சுமணன், மாநிலச் செயற்குழு உறுப்பினராக செயல்பட்ட காலத்தில் கட்சி வகுப்புகள் நடத்துவதில் முக்கிய பங்களிப்பு செய்தார். தீக்கதிர் நாளேட்டில் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், தத்துவார்த்த கட்டுரைகள் எழுதி வந்தார். சிறந்த மார்க்சிய ஞானம் உடைய அவர் மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறுபிரசுரங்களையும் எழுதியுள்ளார்.தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவை உருவாக்குவதிலும், அந்தஅமைப்பை மாநிலம் முழுவதும் கட்டமைப்பதிலும் தோழர் டி.எல்.முக்கிய பங்கு வகித்தவர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை உருவாக்குவதிலும், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று மாநிலம் முழுவதும் சென்றுபரந்துபட்ட அமைப்பாக கட்டமைத்ததிலும் மிக முக்கிய பங்காற்றினார். அதேபோன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடையை உருவாக்குவதிலும், அதனை வளர்த்தெடுப்பதிலும் பெரும்பங்காற்றினார். தமுஎசவின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர். அவர் 2020 ஆகஸ்ட் 24 அன்று காலமானார்.

;