tamilnadu

சென்னை, திருவாரூர், தேனி முக்கிய செய்திகள்

35 மையங்களில் வாலிபர் சங்கம் மதநல்லிணக்க உறுதியேற்பு

சென்னை, அக். 3 - தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான புதனன்று (அக்.2 ) 35 மையங்களில் மதநல்லிணக்க உறுதி மொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் ப.ஆறுமுகம், பொருளாளர் சுசீந்திரா, நிர்வாகிகள் மு.ப.மணிகண்டன், கலைவாணி, ஹேமகுமார், ஹனீபா மற்றும் பகுதிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நேயர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்குவோம் சோனி டிஜிட்டல் நிர்வாகி பேட்டி
சென்னை,அக். 3  தமிழ் நேயர்களுக்கு தமிழ் பாரம்பரியங்கள் மற்றும் உணர்வுகள் சார்ந்த உள்ளுர் உள்ளடக்கத்தை வழங்குவதன் ஒருபகுதியே சோனி லைவ் செயலிக்கு என்ற பிரத்யோக மாக தயாரிக்கப்படும் தொடர்கள் என்று சோனி பிக்சர்ஸ் இந்தியா, டிஜிட்டல் பிரிவின் வர்த்தகத் தலைவர் உதய் சோதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நேயர்களுக்கு பிடித்தமான 40க் கும் மேற்பட்ட பிரபல மான நிகழ்ச்சிகளை வழங்கி வருவதாக கூறினார். சோனி லைவ் செயலிக்காக தயாரிக்கப்பட்ட இருதுருவம் ஒரு திரைப்படம் போன்ற அனுபவத்தை நேயர்களுக்கு தரும் என்றும் இதில் நடிகர் நந்தா துரைராஜ், அபிராமி, திரைப்பட நடிகர் செபாஸ்டியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும்கூறினார். துவக்கம் முதல் இறுதி வரை உங்களை நகராதபடி உங்கள் இருக்கையில் கட்டிப்போடும் வகையில் இந்த இணையத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியா பலதரப்பட்ட மக்கள் நிறைந்த நாடாகும்.அனைத்து நேயர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு தொடர்களை தயாரித்து வழங்குவதை இலக்காகக் கொண்டி ருப்பதாகவும் அதன் ஒரு பகுதியே “இரு துருவம்’’ என்றும் அதனை தயரித்துள்ள அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட், தலைமை செயல் அலுவலர் சமீர் நாயர் கூறினார்.

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
மன்னார்குடி, அக்.3- பாலையூரில் ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்த கம் வேண்டும். கஜா புயலால் சேதமடைந்த பாலையூர் அரசு ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும். குடி மனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும். கூரை வீடுகள் அனைத்தையும் மாற்றி காங்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும். பழுதடைந்து குண்டுங்குழியுமாக உள்ள கிராம சாலைகள் முழுவதையும் சீர் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான பாலையூர் ஊராட்சி மக்கள் மாநாடு பாலையூரில் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலையூர் கிளை சார்பாக நடைபெற்ற இம்மாநாட்டிற்கு எம்.கணேசன் தலைமை ஏற்றார். பாலையூர் கிளைச் செயலாளர் எஸ்.முருகையன் வர வேற்றார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தனது நிறை வுரையில், ஒவ்வொரு ஊராட்சியின் பிரச்சனைகளையும் தேவைகளையும் மையமாக வைத்து அந்தந்த ஊராட்சி களில் உள்ள மக்களை ஓரணியில் திரட்ட வேண்டும். இதுதான் கட்சிக் கிளைகளின் முக்கியமான பணியாக மாற வேண்டும் என குறிப்பிட்டார். ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.

ஆற்றில் மணல் அள்ளியவர் கைது
தேனி, அக். 3- போடி புதூர் பகுதியில் போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாமரை க்கண்ணன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் மூடைகளுடன் வந்த நபரை பிடித்து விசாரி த்தனர்.அவர் கொண்டு வந்த மூடைகள் மணல் மூடைகள் என்பது தெரிந்தது. விசாரணையில் போடி புதூரை சேர்ந்த பெருமாள் (28) என்பதும், ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளி மூடைகளாக எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.