tamilnadu

img

உயிர்பலிக்கு காத்திருக்கும் பாதாள சாக்கடை பள்ளம்

திருவண்ணாமலை, மார்ச் 20- திருவண்ணாமலை நகராட்சியில் திறந்து கிடக்கும் பதாள சாக்கடை பள்ளாத்தால், உயி ரிழப்பு ஏற்படும் முன்பாக, நகராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை நகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் பாதான சாட்டடை  திட்டம் அமைக்கப்படவில்லை. பல இடங்க ளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடை பெறாமல் உள்ளதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். மேலும் திருவண்ணாமலை நகராட்சி யில் பாதாள சாக்கடை வரி, குப்பை வரி,  தொழில்வரி, குடிநீர்வரி உள்ளிட்ட வரிகளை அதிகபட்சமாக கேட்டு, வியாபாரிகளை மிரட்டும் தோரணையில் பேசி, நகராட்சி ஊழி யர்கள் வசூல் செய்து வருவதாகவும் வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரி வித்தனர். திருவண்ணாமலையில் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்தாமல் 21 வார்டுகளில் மட்டும் அமுல்படுத்திவிட்டு, மீதமுள்ள 18  வார்டுகளில் அமுல்படுத்தப்படாத நிலை யில், அனைத்து வார்டுகளிலும் வரி வசூல் செய்வதை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, கடந்த மாதம்  24ஆம் தேதி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு மார்ச்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது, திருவண்ணா மலை நகராட்சிக்கு உள்பட்ட கரிகாலன் தெருவில் பாதாள சாக்கடை மூடி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் இந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். இதுகுறித்து, திருவண்ணாமலை நகராட்சி யில் பலமுறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அதே தெருவில் நகராட்சி அலுவ லர்கள் பலமுறை பாதாளசாக்கடை வரிவசூ லுக்கு வந்து செல்கின்றனர். வசூலுக்கு வரும்  நகராட்சி அலுவலர்களிடம் உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடை பற்றி கூறினால்,  வரி வசூல் செய்வது மட்டுமே எங்கள் வேலை  பாதாள சாக்கடை புகார்களை நகராட்சி ஆணையாளரிடம் போய் கூறுங்கள் என்று அலட்சியமாக பேசுவதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் தவித்துவரும் வேளையில், சுகாதார சீர்  கேட்டையும், உயிராபத்தையும் ஏற்படுத்தும்  இந்த பாதாள சாக்கடை பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்பதே திருவண்ணாமலை நகர  மக்களின் கோரிக்கையாக உள்ளது.