tamilnadu

img

 மாணவிகளின் உயிரைப்பறிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்க - சிபிஐ (எம்) வலியுறுத்தல்

மாணவிகளின் உயிரைப்பறிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

நீட் தேர்வில் தோல்வி அடைந்த திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ துhக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தஞ்சைமாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைசியா தீக்குளித்து மாண்டுள்ளார். இம்மாணவிகளின்மரணம் நெஞ்சைஉலுக்குகிறது. நீட் தேர்வால் கடந்த ஆண்டுகளில் மூன்று மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் மேலும்அதிர்ச்சியளிக்கிறது. இம்மரணங்கள் தற்கொலை என்றாலும் 
உண்மையில் மத்திய அரசின் மருத்துவ கல்விக் கொள்கையால் நடத்தப்படும் படுகொலைகளே.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டுமெனவும் தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாகநிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இரண்டு 
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டுமெனவும் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக மற்றும் மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  ஆனால், மத்திய மோடி அரசு  இதனை செவிமடுக்காமல் அடம்பிடித்து நீட் தேர்வை நடத்தி வருவதால் மாணவிகளின் உயிர் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இக்கொடுமைகளுக்கு மோடி அரசுபொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசு  தங்களது அரசை பாதுகாத்துக்கொள்வதற்காக பாஜகவுடன் கூட்டணிஅமைத்துக்கொள்வதும் மத்திய அரசின் எடுபிடியாக செயல்பட்டு வருகிறது.  இதன் காரணமாக நீட் தேர்வை எதிர்த்து தமிழக மக்களை ஒருங்கிணைத்து மத்திய அரசை வற்புறுத்திட எடப்பாடி அரசு தயக்கம் காட்டி வருகிறது.

மோடி - எடப்பாடி அரசின் கூட்டுச் சதியினால் தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவு தகர்ந்துகொண்டுள்ளது. பலஉயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டுள்ளன. எனவே, உடனடியாக நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிப்பதுடன் குடியரசுத்தலைவரது ஒப்புதலுக்கு காத்துள்ள இரண்டு மசோதாக்களுக்கும் தாமதமின்றி ஒப்புதல் வழங்கிட வேண்டுமென மத்திய-மாநில அரசுகளை வற்புறுத்துவதோடு தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பை உறுதி செய்திட அனைத்து அரசியல்கட்சிகளும் மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் ஒன்று திரண்டு மீண்டும் களம் காண வேண்டுமெனவற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மாணவிகளது மரணத்தால் துயருற்றுள்ள அவர்தம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களது குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணத்
தொகையினை அரசு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மாணவ-மாணவிகள் இத்தகைய கொடுமையான முடிவுகளை மேற்கொள்ள வேண்டாமெனவும்  ஒன்றுபட்டு  போராடி நீட் தேர்விலிருந்து  விதிவிலக்கு பெற அணிதிரள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கானஇடஒதுக்கீட்டினை நிறைவேற்ற வேண்டும்.

மாநிலங்களில் உள்ள மருத்துவபடிப்புக்கான இடங்களில் 15 சதமான இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மத்தியஅரசு பெறுகிறது. இவ்வாறு பெறும் 4600 மருத்துவ இடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து 490 இடங்கள் அளிக்கப்படுகின்றன.அகில இந்திய அளவில் ஒதுக்கீட்டில் உள்ள மேற்கண்ட 4600 இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதமானஇடஒதுக்கீட்டினை அமல்படுத்த மத்திய அரசு மறுத்து 
 வருகிறது. அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடும்மத்திய அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்ட பொருளாதார பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவிதமான இடஒதுக்கீடும்அமல்படுத்தப்படுகிறது. ஆனால், மண்டல் கமிசன் சிபாரிசு அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதமான இடஒதுக்கீட்டினை மத்திய அரசு அமல்படுத்த மறுப்பது  பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, நடப்பாண்டில் அகில இந்திய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவபடிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை  கட்டாயம் அமல்படுத்த வேண்டுமெனவற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். மத்திய அரசின் இந்த அநீதியை எதிர்த்து எடப்பாடி அரசு குரல் கொடுக்க முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.  இக்கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற தவறுமானால் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்பதைதெரிவித்துக்
கொள்கிறோம்.

மும்மொழித் திட்டத்தை கைவிட வற்புறுத்தல்

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் மும்மொழித்திட்டம் அமலாக்கப்படுமெனவும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்படுமெனவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து வலுவான எதிர்ப்புக்குரல் எழும்பியதன் விளைவாக தற்போது இந்தி உள்பட ஒரு மொழியை விருப்பப்பாடமாக படிக்க வேண்டுமென மாற்றி  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று அறிவிப்பு பின்வாசல் வழியாக இந்தியை கட்டாய பாடமாக்கும் முயற்சியென சுட்டிக்காட்டவிரும்புகிறோம். அதாவது, இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும்  தாய்மொழி கட்டாயமெனவும், மூன்றாவதுமொழியாக ஒரு மொழியை விருப்பப்பாடமாக கொள்ள வேண்டும் எனக்கூறுவது மும்மொழித்திட்டத்தை திணிப்பதாகும். இன்றுள்ள நிலையில், மூன்றாவது  மொழியாக இந்தியை ஏற்க வைப்பதற்கான மறைமுகசதித்திட்டமாகும்.

ஏற்கனவே நீண்டகாலமாக தமிழகத்தில் இருமொழிக்கொள்கை வெற்றிகரமாக அமலாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களை மும்மொழித்திட்டத்தின் மூலம் மூன்றாவது மொழியை படிக்ககட்டாயப்படுத்துவது கூடுதல் சுமையை ஏற்படுத்துமென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாணவர்கள் தாங்களாகவே விரும்பி, எந்த மொழியையும் கற்பதற்கு தற்போது தடையில்லை. ஆனால், மும்மொழிதிட்டமென்ற பெயரில் எந்த மொழியையும் மாணவர்களிடம் திணிக்கக்கூடாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்திக்கேட்டுக்கொள்கிறது.

எட்டுவழிச்சாலைஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வற்புறுத்தல்

ஏற்கனவே, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்த்து வரும் எட்டுவழிச்சாலையையும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும்மத்திய மாநில அரசுகள் மீண்டும் திணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உயர்நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்ட எட்டுவழிச்சாலை அரசாணைக்கு தடை கோரியும் அதனை ரத்து செய்யக்கோரியும் தேர்தல் முடிவுகள்வந்த மறுநாளே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதே போல், ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டங்களால் தமிழக விவசாயமும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால்காவிரி பாசன மண்டலம் நாசமாகும் ஆபத்து உள்ளது. எனவே, இத்திட்டங்களை மக்களுக்கு விரோதமாகநிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என வற்புறுத்துவதோடு இத்திட்டங்களை எதிர்த்து அனைவரும் ஒருங்கிணைந்து 
போராட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நேற்று முதல் (ஜுன் 5ம் தேதி முதல்) ஜுன் 10ம் தேதி வரை 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பிரச்சாரக்குழுக்கள் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது என்பதையும்தெரிவித்துக்கொள்கிறோம்.

 தமிழகம் முழுவதும் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைந்துநடவடிக்கை மேற்கொள்க

மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பத்து  நாட்களுக்கு ஒருமுறை, மிக குறைந்தளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகி உள்ளது. சென்னை மாநகரில் மாநகராட்சி தண்ணீர் விநியோகம் 90 சதமான பகுதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து, மாநிலம் முழுவதும் மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட  போர்க்கால அடிப்படையில், ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, குறிப்பிட்டகால இடைவெளியில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு
எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் குடிநீர் பஞ்சத்தை போக்க நிரந்தர திட்டங்களை வகுத்திடவேண்டும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், பாசன வடிகால் வாய்க்கால்களை சிறப்பு நிதி ஒதுக்கி தூர்வாரிட வேண்டும். மாநகர்முதல் கிராமங்கள் வரையில் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளமேற்கொள்ளவேண்டும். மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் கடலில் கலப்பதை தவிர்க்க தடுப்பணைகள், புதியநீர்நிலைகளை உருவாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது

 

;