விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும், சென்னை - சேலம் இடையே, 8 வழி சாலை அமைக்கத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், 18க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் கருப்பு கொடியேந்தி ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.