tamilnadu

img

நலவாரிய ஆன்லைன் உறுப்பினர் பதிவு  மையம் அமைக்கப்பட்டுள்ளது

சென்னை மற்றும் புறநகர் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில் நலவாரிய ஆன்லைன் உறுப்பினர் பதிவு  மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் க.பீம்ராவ் திறந்து வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், கட்டுமான சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எம்.பாண்டியன், பகுதித்தலைவர் ஏ.சுப்பிரமணி, செயலாளர் ஏ.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.