tamilnadu

img

வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்ற 2 பேர் கைது

 சென்னை அம்பத்தூர், ஏப். 18- அம்பத்தூர் பானு நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 24 மது பாட்டில்கள் பறிமுதல். கொரோணா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய கடைகள் தவிர்த்து அரசு மதுபான கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அம்பத்தூர் அடுத்த புதூர் பானு நகர் பகுதியில் வீட்டில் வைத்து சட்டத்திற்குப் புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசித் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பானு நகர் 22ஆவது அவென்யுவை சேர்ந்த பப்லு (31), சுரேஷ் (40) ஆகிய இருவரும் மது பாட்டில்களை வீட்டில் அடைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.  இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 24 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.