புதுதில்லி, மே 27-17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 ஆம் தேதி முதல் 15 ஆம்தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.மே 30 அன்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து 31 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில், நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ஜூன் 6 ஆம் தேதி 17வது மக்க ளவை கூட்டத் தொடர் தொடங்கலாம் என கூறப்படுகிறது. அன்றைய தினம் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு, புதிய எம்பிக்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். நாடாளு மன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத் தில் ஜனாதிபதி உரையாற்றுவார். மக்களவை சபாநாயகர் ஜூன் 10 ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.