tamilnadu

img

சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மரணம்


கோவை,

சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இச்சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக-வின் மூத்த உறுப்பினரும், சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கனகராஜ் இன்று காலை வீட்டில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த போது தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.  கனகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜூக்கு 67 வயது ஆகிறது. இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மறைந்த கனகராஜின் உடல் சூலூர் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாகவுள்ள நிலையில், அதில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது கனகராஜின் மரணத்தால் காலியாகவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடிடத்தக்கது. 

 


;