tamilnadu

img

கோவை: மாத்திரையில் கம்பி இருந்ததால் பரபரப்பு

கோவை கரும்புக்கடை பகுதியில் பல்வலிகாக வாங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கரும்புகடை பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் பல் வலி காரணமாக அப்பகுதியில் உள்ள செல்வம் மெடிக்கல்ஸ் என்ற மருந்து கடையில் இன்று காலை ஓபிளாக்சின் (ofloxacin)  மாத்திரை வாங்கியுள்ளார். மாத்திரை வாங்கிய பின் வீட்டிற்குச் சென்ற முஸ்தபா அதை சாப்பிடுவதற்காக பிரித்து பார்த்தபோது,  மாத்திரையின் உட்பகுதியில் சிறிய கம்பி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த முஸ்தபா உடனடியாக மாத்திரையை எடுத்துக்கொண்டு செல்வம் மருந்து கடையில் வந்து முறையிட்டார்.  மேலும் மாத்திரை வாங்கியதில் ஏற்பட்ட சேவை குறைபாடு  தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையாக புகார் அளிக்க இருப்பதாகவும் முஸ்தபா  தெரிவித்துள்ளார்.