tamilnadu

img

ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படுத்திடுக

பென்னாகரம், ஜூலை 26- பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்தை 24 மணி நேரமும் செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காலிப்பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஸ்கேன்,  எக்ஸ்ரே, இசிஜி உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். பாம்பு கடி மற்றும் நாய் கடிகளுக்கான ஊசிகள் மற்றும் மாத்திரைகளை தட்டுப் பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ள செவிலி யர்கள் தங்கி செயல்பட அரசு உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மகப்பேறு மருத்துவ உதவிகள் பெறுவ தில் உள்ள முறைகேடுகளை களைந்து அனைவருக்கும் முறையாக உதவித் தொகை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பாப்பாரப்பட்டி பகுதி குழு தலைவர் சிலம் பரசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜி.சிவன், மாவட்ட துணைத் தலைவர் வேலாயுதம், பாப்பாரப்பட்டி பகுதி செயலாளர் கே.லோகநாதன், பொரு ளாளர் முகிலன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

;