ஏற்காடு, மே 27-ஏற்காடு மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அங்கு கோடை விழா நடத்தப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா விரைவில் நடைபெறும். மேலும், தேர்தல் விதிமுறைகள் தகர்வு செய்யப்பட்டுள்ளதால் வழக்கம்போல் இனி அரசின்இயந்திரங்கள் செயல்படும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்து இடங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு இன்றி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மேலும், சேலம் மாவட்டத்தில் அதிகஅளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளது. தேர்தல் பணியின் காரணமாக பிளாஸ்டிக்தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் போதிய கவனம் செய்ய முடியாத நிலைஇருந்து வந்தது. இனி அனைத்து வார்டுகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும், பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.