tamilnadu

img

வன உயிரின வார விழா மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டிகள்

பொள்ளாச்சி, செப்டம்பர். 21- வன உயிரின வார விழாவை முன் னிட்டு பொள்ளாச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சனியன்று வன விலங்கு குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா வருடந்தோறும் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக  கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள நாச்சியார் வித்யா லயம் பள்ளியில் வன உயிரின வார விழா  நடைபெற்றது.  இதையடுத்து வன விலங்கு கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.  இதுகுறித்து  கோவை மாவட்ட வன  அலுவலர் மாரிமுத்து கூறுகையில்,    ஆனை மலை புலிகள் காப்பகம் சார்பில் வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் விதமாக பொள்ளாச்சி தாலுகா விற்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,  மாணவியர்களுக்கு ஓவியம், கட் டுரை, பேச்சு போட்டி என பல்வேறு போட்டி கள் நடைபெற்றன. இந்நிகழ்வில் பள்ளி  மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் திரா னோர் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியன்று பொள்ளாச்சி அடுத்த  டாப்சிலிப்பில் உள்ள உண்டு உறவிடப் பள்ளியில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில் டாப்சிலிப் பழங்குடியின மக்கள் பாரம்பரியம் மற்றும் டாப்சிலிப் சுற்றுலா  மையம் குறித்தும் மாணவ, மாணவியர்க ளுக்கு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட் டுள்ளது. மேலும் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்க வனத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள் ளது என தெரிவித்துள்ளார். இதில் பொள் ளாச்சி வனத்துறை வனச்சரகர் காசி லிங்கம் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

;