tamilnadu

img

பொது வேலை நிறுத்தத்தை மாபெரும் வெற்றிபெற வைப்போம்

அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆயத்த மாநாட்டில் சூளுரை

கோவை, டிச. 9  மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஜனவரி 8 ஆம்தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட் டத்தை நூறு சதவீதம் வெற்றிபெற வைப்போம் என அனைத்து  மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் சூளுரைத்தனர். அனைத்து  தொழிற்சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஜனவரி 8 பொது வேலை  நிறுத்த ஆயத்த மாநாடு கோவை சர்க்கரை செட்டியார் திருமண மண்டபத்தில் திங்களன்று நடை பெற்றது. ஐஎன்டியுசி தலைவர் வி.ஆர்.பாலசுந்தரம் தலைமை தாங்கினார். இம் மாநாட்டில் ஐஎன்டியுசி,  சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், எல்பிஎப், ஏஐசிசிடியு, எம்எல்எப், எஸ்டியு, டிடிஎஸ்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் இனைக் கப்பட்ட சங்கங்களின் நிர்வாகி கள்,  பிஎஸ்என்எல்,  வங்கி,  இன் சூரன்ஸ், ரயில்வே உள்ளிட்ட  மத்திய பொதுத்துறை நிறுவனங்க ளின் தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மாநாட்டில் ஐஎன்டியுசி ஜி.சீனிவாசன், சிஐடியு சி.பத்ம நாபன், எஸ்.கிருஸ்ணமூர்த்தி, ஆர்.வேலுசாமி, எஸ.ஆறுமுகம், ஏஐடியுசி எம்.ஆறுமுகம், சி.தங்க வேல், எச்எம்எஸ் டி.எஸ்.ராஜா மணி, க.வீராச்சாமி, எல்பிஎப் ப.மணி, வே.ஆனந்த்,  எம்எல்எப் கோவிந்தசாமி,ஷாஜகான், ஏஐசி சிடியு வி,வேல்முருகன், பெரோஷ் பாபு, எஸ்டியு ரகு, ஷாஜகான் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக வேலைநிறுத்த தயாரிப்பு ஆயத்த மாநாட்டில் பேசிய தலைவர்கள், மோடியின் ஆறாண்டு கால ஆட்சியில் நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள் ளது. கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மை, உற் பத்தி நிறுத்தம், பொருளாதார நெருக்கடி, விவசாய நெருக்கடி என அனைத்து துறைகளிலும் கடும் நெருக்கடியை நாடு சந்தித்து வருகிறது. மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையின் கார ணமாக கோடிக்காணக்கான உழைப்பாளி மக்கள் சொல் லென்னா துயரத்தை அடைந்து வருகின்றனர். இச்சிக்கலில் இருந்து மீள்வதற்கான உருப்படி யான திட்டங்கள் இல்லாததால் மத்திய பாஜக அரசு நாட்டின் வள மிக்கப் பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு விற்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இந்த மக்கள் விரோத மோடி அரசை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்க ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை நூறு சதவிகித வெற்றி பெற வைப் போம். இது இந்திய மக்களுக்கு ஒரு நம்பிக்கையாகவும்,மோடி அரசின் ஆட்சியின் முடிவுக்கு இப் போராட்டம் ஆரம்பமாக இருக் கட்டும் என்றனர். அந்த வகையில் கோவையில் தொழில அமைப்பு கள், வியாபாரிகள், தொழிலா ளர்கள், மத்திய மாநில அரசு பொதுத்துறை நிறுவன தொழிலா ளர்கள் ஆயிரமாயிரமாய்திரண்டு வேலை நிறுத்த போராட் டத்தை முழு வெற்றியடைய வைப் போம் என உரையாற்றினர்.இம் மாநாட்டில் ஏராளமானோர்  பங்கேற்றனர்.

;