tamilnadu

img

விவசாய விளைநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதா? நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் தொடர்ந்து போராடுவோம்

அவிநாசி, ஜூலை 14 – திருப்பூர் ஒன்றியம் காளம் பாளையத்தில் விவசாய விளை நிலத்தில் உயர்மின் கோபுரம்  அமைக்கும் பணி தொடங்கப்பட் டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டுள்ள  விவசாயிகளுக்காக நாடாளு மன்றத்தில் இடதுசாரி உறுப்பி னர்கள் தொடர்ந்து  போராடுவோம் என்று திருப்பூர் எம்.பி. கே.சுப்ப ராயன் கூறினார். திருப்பூர் ஒன்றியம், பொங்கு பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளம்பாளையத்தில் விளை நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கி நடை பெற்று வருகிறது. இதில் பாதிக் கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளை ஞாயி றன்று காளம்பாளையம் மாகாளி யம்மன் கோயில் திடலில் திருப்பூர்  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  கே.சுப்பராயன் சந்தித்தார். அவ ரிடம் விவசாயிகள் மனு அளித் தனர். அரசூர் முதல் ஈங்கூர் வரை தமிழ் நாடு மின் தொடரமைப்புக் கழகத் தால் உயர் மின் கோபுரத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.  இப்பணிகள் குறித்து விவசாயி களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் விளைநிலங்களில் அத்துமீறி மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள் ளனர். இந்தத் திட்டத்தில் பல இடங் களில் மின் கோபுரம் மற்றும் மின்  பாதைகள் நேராக அமைக்க வாய்ப்பு  இருந்தும் அதிகாரிகள் தங்கள் சுயலாபத்திற்காக வழித்தடத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

இது தொடர்பாக இதுவரை எந்த ஆவணங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மேலும் மே 30  அன்று மாவட்ட ஆட்சியர் பாதிக்கப் பட்ட விவசாயிகளிடம் விசாரணை நடத்தி 2 வாரங்களுக்குள் மேற் பார்வை பொறியாளர் முன்னி லையில், இன்னொரு முறை விசா ரணை நடத்தி விட்டு பின்பு முடிவு செய்யலாம் என்று கூறினார்.  ஆனால் கடந்த ஜூன் 18 அன்று  விளைநிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்க முன் நுழைவு அனுமதி  வழங்கியுள்ளார். ஆனால்  பாதிக்கப்பட்ட எங்களை வரு வாய் கோட்டாட்சியர் மற்றும் மேற் பார்வை பொறியாளர் முன்னி லையில் ஜூன் 26 அன்று விசா ரணை நடத்த அழைத்தனர். இது விவசாயிகளை ஏமாற்றும் செயல் ஆகும்.  மேலும் ஜூன்  18 அன்று வழங்கி யுள்ள முன் நுழைவு அனுமதி நகல் இன்றுவரை விவசாயிகளிடம் வழங்காமல் மின்கோபுரம் அடித் தளம் அமைக்கும் பணியை  வரு வாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் மின் துறை அதி காரிகள் செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்தினால் சிறு, குறு விவ சாயிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. எனவே மின்  கோபுரம் அமைக்கும் பணிகளை  முழுமையாக மேற்பார்வை பொறி யாளர் மற்றும் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் முன்னிலையில் கள ஆய்வு  செய்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான தீர்வு ஏற்பட்ட  பின்பு திட்டப் பணிகளை தொடரலாம். அதுவரை மின் கோபுரம் அமைக்கும்  பணிகளை நிறுத்தி வைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  கே.சுப்ப ராயன் கூறுகையில், உயர் மின்  கோபுரம் பதிக்கும்போது விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மனு அளித்துள் ளேன். இதுவரை எந்தவிதமான பதிலும் தரவில்லை. இடதுசாரி எம்பிகள் நாடாளுமன்றத்திலும், வெளியேயும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட உள்ளோம்.  இதில் மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன்களில் அக்கறையற்ற அரசாக செயல்படுகின்றன. இப் பிரச்சனையில் விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம் என்று கே.சுப்பராயன் கூறினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு விவ சாய சங்க திருப்பூர் மாவட்டச் செய லாளர் ஆர்.குமார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.அப்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் விசுவநாதன், சிபிஐ விவசாய சங்கத்தின் திருப்பூர்  மாவட்டச் செயலாளர் சின்னச் சாமி, உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் இயக்க சட்ட ஆலோ சகர் ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் விஸ்வநாதன், சண்முகம், பார்த்த சாரதி, காளம்பாளையம் முத்து,  மயில்சாமி, விஜயகுமார்,  உழவர் உழைப்பாளர் கட்சி தூரன்நம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.