tamilnadu

img

சிஐடியு அகில இந்திய மாநாட்டு ஜோதி பயணம் தொடங்கியது

கோவை, ஜன.18–  சிஐடியு அகில இந்திய மாநாட்டு ஜோதி பயணம் கோவையில் சனி யன்று எழுச்சியோடு துவங்கியது. இந்திய தொழிற்சங்க மையத்தின் 16 ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் ஜன. 23 ஆம் தேதி துவங்கி 27 ஆம் தேதி வரையில் நடை பெற உள்ளது. இம்மாநாட்டின் நோக் கங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சிஐடியு தமிழ் மாநிலக்குழு பல்வேறு பிரச்சார இயக் கங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் இருந்து சென்னைக்கு சின்னியம் பாளையம் தியாகிகள் நினைவு ஜோதி பயணம் சனியன்று தொடங் கியது.  முன்னதாக, கோவை மாவட்ட உழைப்பாளி மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி களின் தியாகங்களை மக்கள் மத்தி யில் கொண்டு செல்லவும், மாநாட்டு செய்திகளை உழைப்பாளி மக்களி டம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு பிரச்சார இயக்கங்களை சிஐடியு கோவை மாவட்டக்குழு முன்னெடுத்துள்ளது. இதன்ஒருபகுதியாக சனியன்று ஸ்டேன்ஸ் மில் முன்புறமிருந்து ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் ஜோதி யும், மதுக்கரையில் இருந்து ராக்கி யண்ணன் நினைவு ஜோதியும், உப்பி லியபாளையத்தில் இருந்து தியாகி முத்து நினைவு ஜோதியும் ஏந்தி வரப் பட்டது.  கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் மேற் கொண்ட தியாகிகள் ஜோதி பயணம் நிறைவாக சின்னியம்பாளையம் தியாகிகள் மேடைக்கு வந்தடைந்தது. இந்த தியாகிகளின் நினைவு ஜோதி பயணத்தை சிபிஎம் சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் கே.சி.கருணா கரன், சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், பொருளாளர் ஆர். வேலுசாமி, மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஆறுமுகம், மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கே.மனோகரன், சந்தி ரன், ஏ.எல்.ராஜா, கே.ரத்தினகுமார், பிரான்சிஸ் சேவியர், பஞ்சலிங்கம், ஜோதிபாசு மற்றும் முன்னணி ஊழி யர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகை பிங் கர் போஸ்ட் பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஐடியு தொழிற்சங் கத்தின் மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் எல்.தியாகராஜன் நினைவு ஜோதியை  சிஐடியு சுமை ஆட்டோ சங்கத்தின் செயலாளர் வினோத் எடுத்து கொடுக்க சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏ. நவீன் சந்தி ரன் பெற்றுக்கொண்டார்.இதில் சிஐ டியு மாவட்ட தலைவர் கே. சுந்தரம், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா செயலாளர் எல் .சங்க ரலிங்கம், விவசாயிகள் சங்கத்தின் உதகை இடைக்குழு செயலாளர் கே ராஜேந்திரன், ஸ்டெர்லிங் பயோ டெக் ஊழியர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.ராஜரத்தினம், சிஐடியு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் உதகை கிளை நிர்வாகி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மஞ்சூரை அடுத்த குந்தா லட்சுமி விலாஸ் பகுதியில் தோழர் சுஞ்சன் நினைவு ஜோதி பய ணம் அவரது இல்லத்தில் இருந்து துவங்கியது.அவரது மனைவி சாக்கி, மகன் சதீஷ்,பேரன் குசால் ஆகியோர் ஜோதியை எடுத்து கொடுக்க சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஜெ. ஆல் தொரை பெற்றுக்கொண்டார். இந்நி கழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ஐ.அலியார், என்.எல்.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீழ் குந்தா பகுதியில் தோழர் பீமன் நினைவு ஜோதிபயணம் அவரது இல்லத்தில் இருந்து துவங்கியது.அவரது சகோதரர் லட்சுமணன், மகள் வெண்ணிலா ஆகியோர் எடுத்து கொடுக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ஐ .அலியார் பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஜெ ஆல்தொரை, ஏஐடியுசி ஆரி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோத்தகிரி கைதளா பகுதியில் தோழர் எஸ் சின்னதுரை நினைவு ஜோதிபயணம் அவரது இல்லத்தில் இருந்து துவங்கியது.அவரது மனைவி சாந்தி,மகன் ரதீஷ் ஆகியோர் எடுத்து கொடுக்க சிஐடியு மாவட்ட தலைவர் கே சுந்தரம் பெற்று கொண்டார்.இந்நிகழ்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வி.மணிகண்டன், கமிட்டி உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், சிஐடியு மரம் மற் றும் பொது தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன், போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தசரதன், தையல் கலைஞர்கள் சங்கத் தின் நிர்வாகி கே. மகேஷ்,  இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா தலைவர் சுந்தர், மாதர் சங்கத்தின் ஜெசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;