tamilnadu

img

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு துவக்கம்

ஈரோட்டில் உற்சாக கொண்டாட்டம் - சிறப்பு கருத்தரங்கம்

ஈரோடு, அக்.18- இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க நிகழ்வு ஈரோட்டில் உற்சாகமாக கொண் டாட்டப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் முதல் கிளை 1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. இதனையொட்டி நூற்றாண்டு விழா  நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கொண்டாடப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட் டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு நகர செய லாளர் பி.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ் கொடி யினை ஏற்றி சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பரமசிவம், எஸ்.சுப்ரமணியன், ஆர்.கோமதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஈரோடு நகர கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு கருத்தரங்கம்

இதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற் றாண்டு முன்னிட்டு ஈரோடு மாந கராட்சி திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற் றது. இக்கருத்தரங்கிற்கு கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.துரைராஜ் தலைமை வகித் தார். மாவட்ட குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி வரவேற்புரை யாற்றினார். மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.மாரி முத்து, எஸ்.முத்துசாமி, ஜி.பழனி சாமி, பி.பி.பழனிசாமி, பரமசிவம், ஆர்.கோமதி, முனுசாமி, ஆர்.விஜய ராகவன், எஸ்.சுப்ரமணியன் மற் றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள்,  இடை குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் பி.சுந்தர்ராஜன் நன்றி உரையாற்றினார்.
 

;