tamilnadu

img

மாணவிகள் கழிப்பறையில் ஆபாச படம் எடுத்த சமூக விரோதிகள்

நாமக்கல், ஜூன் 10- பள்ளிபாளையம் அருகே அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறையில் செல்போனை வைத்து ஆபாச படம் எடுத்ததை தடுத்த மாணவியை கத்தியால் குத்திய சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே உள்ள ஆவா ரங்காடு பகுதியில் அரசினர் மேல் நிலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்ற னர். இப்பள்ளியில் உள்ள மாண விகள் கழிவறையின் பின்புறப் பகுதி இடிந்து சேதமடைந்தும், மேற்கூரை இல்லாமல் உள்ளது. இதனை பயன்படுத்தி அப்பகுதி யைச் சேர்ந்த சமூக விரோதிகள் சிலர் கழிவறை  பின்புற வழியாக சென்று வருவதாகவும், கழிவறை யில் செல்போன் வைத்து ஆபாச படம் எடுப்பதாகவும் கூறப்படு கிறது. இந்நிலையில்,  கடந்த வியா ழக்கிழமையன்று பத்தாம் வகுப்பு மாணவி கழிவறைக்குச் செல்லும் போது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்து மாண வியை கத்தியால் குத்த முயன் றுள்ளனர். அவர்களிடமிருந்து மாணவி தப்பியோடியபோது மாணவியின் முதுகில் கத்தியால் குத்தியதில்  சீருடை கிழிந்துள்ளது.

இதன்பின் அவர்களிடமிருந்து தப்பி வந்த மாணவி, அதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார்  அளித்துள்ளார். மேலும், இது குறித்து அம்மாணவி தனது பெற்றோருடன் தெரிவித்துள் ளார். ஆனால், பள்ளிக்கு  அவப் பெயர் ஏற்படும் என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கூடாது என்று பள்ளி  நிர்வாகம் பெற்றோர்களை திருப்பி அனுப் பியதாக கூறப்படுகிறது. இச்செய்தி அப்பகுதி பொதுமக் களுக்கு பரவியதை அடுத்து திங்க ளன்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் னோர் பள்ளியை முற்றுகையிட்ட னர். அப்போது, பள்ளி மாண வியை தாக்கிய சமூக விரோதி களை கைது செய்யக்கோரியும், கழிவறையின் பின்புறம் செல் போன் வைத்து ஆபாச படம் எடுப் பவர்கள் மீது நடவடிக்கை எடுக் கக் கோரியும் வலியுறுத்தினர். இதேபோல், பள்ளி  பகுதியில் சாரா யம் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது அச்சமாக உள்ளதாக கூறி பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் குறித்து அறிந்த பள்ளிபாளையம்  காவல் ஆய்வாளர்  சாந்தமூர்த்தி  தலை மையிலான  காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத் தினர். இதில் சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளை உடனடியாக கைது  செய்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் களைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி யது.

;