tamilnadu

நாமக்கல் மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செம்மேடு பகுதி கூச்சக்கிகிராய்பட்டி வாழவந்திநாடு செல்லும் வழியில் பழுதடைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைத்து அனைவருக்கும் போதிய குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இயற்கை பேரிடர் பாதிப்பை தெரிந்துகொள்ள புதிய செயலி அறிமுகம்

நாமக்கல், மே 9- இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பை தெரிந்து கொள்ள வசதியாக செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன் கருதிவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக செல்போன் செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த செயலியின் பெயர் கூசூ-ளு-ஆ-ஹ-சுகூ . அதை இலவசமாக ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இச்செயலியின் மூலம் புயல், மழை, வெள்ளம், அதிக வெப்பம் மற்றும் பேரிடர் காலங்களில் விழிப்பறிக்கைகள் அனுப்பப்படும். அது முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.இச்செயலியை அனைத்து துறை அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இச்செயலியின் மூலமாக சேதமடைந்த வீடு, கால்நடை, பயிர்கள் ஆகியவற்றினை புகைப்படம் எடுத்து அவற்றினை பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது.கூடுதல் தகவல்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு அலுவலர் அசோகனை 9943237611 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மாணவ, மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்

தருமபுரி, மே 9-தருமபுரி, அரூரில் மாணவ, மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் இன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் மே 10 ஆம்தேதி (இன்று) முதல் மே 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டவிளையாட்டரங்கில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால், ஹேண்ட்பால் ஆகியவிளையாட்டுக்களிலும், மே 10 ஆம் தேதி முதல்மே 24 ஆம் தேதி வரை அரூரில் மினி விளையாட்டரங்கில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால், டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுக்களிலும் நடைபெறவுள்ளது. கோடைகால பயிற்சி முகாம் காலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும். பயிற்சிமுகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு முட்டை இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தருமபுரி பகுதியை சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் அரூர் பகுதியைச் சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் அரூரி மினி விளையாட்டரங்கில் நடைபெறும் கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.

;