tamilnadu

img

எம்.ஜி.புதூர் மாநகராட்சிப் பள்ளியை மூடக் கூடாது

திருப்பூர், ஆக. 20– திருப்பூர் முத்துப்புதூர் மாந கராட்சி நடுநிலைப் பள்ளியை மூடக்கூடாது என வலியுறுத்தி அப்பள்ளியில் படிக்கும் மாண வர்களின் பெற்றோர் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளா கத்தில் திங்களன்று நடைபெற் றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக் கள் மனுக்கள் அளித்தனர். திருப்பூர், முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற் றோர் அளித்த மனுவில், முத்துப் புதூர் பள்ளியில் எங்கள் குழந்தை கள் உட்பட பல்வேறு பகுதிக ளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரு கின்றனர். நாங்கள் பெரும்பாலும் பின்னலாடை உற்பத்தி நிறுவ னங்களில் வேலை செய்து, வாடகை வீடுகளில் வசித்து வரு கிறோம். 

கார் நிறுத்துமிடம்

இவற்றுக்கிடையில் இப்பள் ளியை அப்புறப்படுத்தி விட்டு, நகர மேம்பாட்டு திட்டத்தில் பல  அடுக்கு கார் நிறுத்துமிடம் அமைக்கும் நோக்கில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த 16-ஆம் தேதி மாநகராட்சி ஆணையர் தலைமையில் பள்ளி வளாகத்தில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு  கூட்டம் நடத்தியது. அதில் பெற் றோர்கள் ஒருமித்த கருத்தாக பள்ளியை நிரந்தரமாக மூடவோ, அப்புறப்படுத்தவோ கூடாது என தெரிவித்தனர். கடந்த 70 ஆண்டு களாக செயல்பட்டு வரும் மாநக ராட்சி பள்ளியை குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நிரந்தரமாக மூடும் முடிவைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

7 மாத ஊதியம் வழங்கக் கோரி
பிஎஸ்என்எல் நிறுவன தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் அளித்த மனு வில், கடந்த 1997ஆம் ஆண்டு முதல் தொலைத்தொடர்பு துறை யில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணி செய்து  வருகிறோம். திருப்பூர் மாவட் டத்தில் தலைமை பிஎஸ்என்எல் அலுவலகம், வீரபாண்டி, காங்க யம் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய அலுவலகங்க ளில் சுமார் 50 பேர் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு  கடந்த ஏழு மாத சம்பளம்  சரியாக வழங்கப்படவில்லை. ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு கட்டாயப்படுத்துகிறார்கள். எனவே ஆட்குறைப்பு நடவடிக் கையை நிறுத்தி, பணி நிரந்த ரம் மற்றும் நிலுவைத்தொகையை  பெற்றுத் தர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், தாயம்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மையத் தின் மூலம் கொழுமங்குழி, பீலிக் காம்பட்டி, மரவாபாளையம், வேங்கிபாளையம், ராமநாத புரம் உள்பட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வரு கின்றனர். இருப்பினும் மருத்து வமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லை.  எனவே 108ஆம்பு லன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண் டும், என்றனர்.

குடிநீர் வழங்கக் கோரி
ஊத்துக்குளி வட்டத்திற்கு உட்பட்ட தென்றல் நகர் பொது மக்கள் அளித்த மனுவில், கடந்த 13 ஆண்டுகளாக தென்றல்நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி றோம். எங்கள் பகுதியில் 10 ஆயி ரம் லிட்டர் கொள்ளவு கொண்ட  மேல்நிலை நீர் தேக்க  தொட்டி அமைத்து, ஆழ்குழாய் கிணறு மூலமாக நீர் எடுத்து வழங்கப்பட்டு வருகிறது. இதைக் குடிப்பதால் எங்களுக்கு உடல்நலக் குறைவு பிரச்சனை ஏற்படுகிறது. இது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு கொடிவேரி கூட்டு குடி நீர் 4ஆவது திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும். 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட் டியை அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.